கை கொடுக்கும் விஜய் சேதுபதி . ஹீரோவாக களமிறங்கும் விஜய் மகன் – முதல் படமே தெலுங்கு ரீ -மேக் தானாம்.

0
4763
Sanjay-and-vijay

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துஉள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

vijay-son

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

- Advertisement -

இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் தமிழ் சினிமா உலகில் கூடிய விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமா உலகில் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான படம் “உப்பெனா”. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமார் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.

Vijay Sethupathi kisses Vijay as Master shoot comes to an end ...

-விளம்பரம்-

இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ் தான் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும், இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ராயாணம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் கதையை நடிகர் விஜய்யிடம், விஜய் சேதுபதி அவர்கள் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது கூறி உள்ளார். தளபதி விஜய் அவர்களும் தனது மகன் ஜேசன் சஞ்சய்க்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கும் உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் உப்பெனா படத்தை இயக்கிய புச்சி பாபு அவர்கள் தான் தமிழிலும் இந்த படத்தை இயக்க உள்ளார். கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement