சமீபத்தில் தன்னை பற்றி வைரலான மீமை பார்த்து விஜய் சேதுபதி சொன்ன விஷயம். (அவரே எதிர்பார்க்கலயம்)

0
954
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் பல்வேரு படங்களில் வில்லனாகவும் அசத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வரும் ரஜினி மற்றும் விஜய் இருவர் படத்திலும் வில்லனாக நடித்து அசத்திவிட்டார்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

இவர்களை தொடர்ந்து தற்போது உலகநாயகன் நடிக்கும் விக்ரம் படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் விக்ரம் படத்தின் போஸ்டர் வெளியான போது நடிகர் விஜய் சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் போது கமலுடன் எடுத்த புகைப்படத்தை விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் பகிர்ந்து கடின உழைப்பு என்றால் என்ன என்று கேட்டால் இந்த படத்தை காண்பியுங்கள் என்று கூறிபிடப்பட்டு இருந்தது.

விஜய் சேதுபதி, சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருக்கிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் படப்படிப்பு நடைபெற்றது. அப்போது இந்த மீம் விஜய் சேதுபதியிடன் காண்பிக்கப்பட்டது.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ரம்மி ஆகிய இரண்டு படங்களின் இசை வெளியிட்டு விழா கமல் சார் வீட்டில் தான் நடைபெற்றது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் போது எடுத்த புகைப்படம் தான் அது இது எல்லாம் கடின உழைப்பு என்பது தெரியவில்லை ஆனால் இதையெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement