கமலின் விக்ரம் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக மிரட்டி கொண்டு வருகிறார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் மேலும், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருந்தார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
விஜய் சேதுபதியின் விக்ரம் படம்:
இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம். ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன், பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விக்ரம் படத்தின் கதை:
இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இருக்கிறது. சமீபத்தில் தான் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசனின் படம் வெளியாக இருப்பதால் ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளை எல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் எடுத்து இருக்கிறார். மேலும், விக்ரம் படத்தில் கேங்ஸ்டராக விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார். சமீப காலமாகவே இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் படங்களில் மிரட்டி வருகிறார்.
விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டிய படங்கள்:
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த மாஸ்டர் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதேபோல தெலுங்கு உப்பன்னா படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். தொடர்ந்து இவர் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி கொண்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் விக்ரம் படம் குறித்து கூறியிருப்பது, மனிதனின் மற்றொரு இருண்ட பக்கத்தை காட்டுவது எனக்கு பிடித்தமான ஒன்று. நல்ல வில்லனாக நடிப்பது திரையில் பார்ப்பதன் மூலம் என் நிஜ வாழ்க்கையில் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை வாழ்வது போன்று உணர்கிறேன்.
விஜய் சேதுபதி அளித்த பேட்டி:
திரையில் காண்பிக்கப்படும் எந்த வில்லன்களின் நடிப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. மாஸ்டர், உப்பன்னா ஆகிய இரண்டு படங்களிலும் வில்லன் நடிப்பு ஒரே மாதிரியாக இருக்காது. அதே போல தான் விக்ரம் படத்தில் என்னுடைய நடிப்பும் இருக்கும். ஒரு மனிதனின் மிகவும் மோசமான பக்கத்தை தெளிவாக காட்டி இருப்பேன். இந்த விக்ரம் படத்தை காண நானும் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். விக்ரம் படத்தில் ஏற்கனவே கமலஹாசன் மற்றும் பகத் பாசில் போன்ற இரண்டு சிறப்பான நட்சத்திரங்கள் இருக்கின்றனர். என்னால் முடிந்த சிலவற்றை நான் இந்த படத்திற்காக கொடுத்திருக்கிறேன். நான் கமலஹாசனின் மிகப் பெரிய ரசிகர் என்று பல விஷயங்களை கூறியிருந்தார்.