இந்த மாதிரி ரோலுக்கு எல்லாம் கேப்டன் தான் – விஜய் சேதுபதியின் வீடியோ.

0
463
vjs

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தான் முதன் முதலாக ஹீரோவாக ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இவருடைய நடிப்பும், எதார்த்தமான பேச்சும் தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தது.

<3 #கேப்டன் #விஜயகாந்த் <3 #விஜய்சேதுபதி <3 #Captain_Vijayakanth <3 #Vijaysethupathi

Vijayakanth – விஜயகாந்த் ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಜುಲೈ 3, 2020

நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியிடம் உங்களுக்கு பிடித்த போலீஸ் படம் என்றால் அது யாருடையது என்று கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி கூறியது, எனக்கு மிகவும் பிடித்த போலீஸ் படம் என்றால் கேப்டன் படம் தான். அதிலும் ஆல்டைம் பேவரட் போலீஸ் படம் என்றால் சத்ரியன். அது மட்டுமில்லாமல் விஜயகாந்த் போலீஸ் படம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அவரை போலீஸ் கெட்டப்பில் பார்க்கும்போது ரசிக்க வைக்கும். கேப்டன் பிரபாகரன், சிறைச்சாலை எல்லாம் செம மாஸ். எனக்கு எப்பவுமே ஸ்கிரீனில் போலீஸ் கதாபாத்திரம் என்றால் கேப்டன் விஜயகாந்த் தான். அவர் எத்தனை போலீஸ் படம் நடித்தாலும் சலிப்பே இருக்காது. அந்த அளவிற்கு நன்றாக இருக்கும். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த். தற்போது இவர் நடிப்பதை விட்டு முழு நேர அரசியல்வாதியாக உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement