தனக்கு வந்த படம் ! விஜய் சேதுபதியை நடிக்க சொன்ன நடிகர் ! எந்த படம் எந்த நடிகர் தெரியுமா ?

0
5625

தேர்ந்தெடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களை கையிலெடுத்து, சினிமாவில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருப்பவர் `மைனா’ விதார்த்.அந்தப் படத்துக்குப் பின் `குற்றமே தண்டனை’, `குரங்கு பொம்மை’, `ஒரு கிடாயின் கருணை மனு’ என பல படங்களில் நடித்துவிட்டார். அதைத் தெடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றியும் ஜாலியாக பேசுகிறார் விதார்த்.

vidharth

விஜய் சேதுபதி கூத்துப் பட்டறையிலதான் வேலை பார்த்தார். அவர்கூட பேசியிருக்கீங்களா?
அவர் அங்க கேஷியராதான் வேலை பார்த்தார். அவருக்கு நடிக்க ஆசை இருக்குங்கிறதே ரொம்ப நாள் கழிச்சுதான் தெரியும். அங்க நடக்குற விஷயங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா பங்கெடுத்துக்க ஆரம்பிச்சார். கூத்து பட்டறையில ஸ்ட்ரீட் ப்ளே பண்ண ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு நாடகங்கள் பண்ற வேலை இருந்ததால், விஜய் சேதுபதியா ஒரு டீம் ஆரம்பிச்சு ஸ்ட்ரீட் ப்ளே நிறைய பண்ணார்.

அதுலதான் அவர் நடிக்க ஆரம்பிச்சார். அப்புறம் குறும்படங்களிலேயும் நடிக்க ஆரம்பிச்சோம். ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல முதல்ல என்னைத்தான் பேசியிருந்தாங்க, அதுக்காக அட்வான்ஸும் வாங்கிட்டேன்.

சில காரணங்களால என்னால பண்ண முடியல. சீனு ராமசாமி சார் என்கிட்ட ஃபோன் பண்ணி, ’விஜய் சேதுபதி எப்படி’னு கேட்டார். ’அவன் ரொம்ப நல்ல பையன், நடிக்குறதுக்கு ரொம்ப ஆர்வம் இருக்கிற பையன். அந்த கதாபாத்திரதுக்கும் கரெக்ட்டா இருப்பான்’னு சீனு சார்கிட்டேயும்; ’கதை எதுவும் கேட்காத போய் பண்ணுடா’னு விஜய் சேதுபதிகிட்டயும் சொன்னேன்.

Thenmerku Paruvakatru

அப்புறம் நிறைய நல்ல படங்கள் பண்ணுனார். அதுல எனக்கு என்ன படங்கள் பிடிச்சிருக்கோ, அவனுக்கு என்னுடைய படங்களில் எது பிடிச்சிருக்கோ அதுக்கு மட்டும்தான் ஃபோன் பண்ணி பேசிக்குவோம். எல்லா படங்களுக்கும் பேசிக்க மாட்டோம்.”