சூரி – விஜய் சேதுபதியின் விடுதலை 2: முதல் பாகத்தை மிஞ்சியதா? படம் எப்படி இருக்கு- முழு விமர்சனம் இதோ

0
178
- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. முதல் பாகம் வெற்றியடைந்ததை கொடுத்து இரண்டாம் பாகம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருந்தார். இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் சுரங்கத்தை தோண்டி அங்கிருக்கும் வளங்களை எடுக்க அரசாங்கம் முடிவெடுக்கிறது. இதனால் மக்களுடைய இடம் பறிபோகிறது என்று பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி தலைமையில் மக்கள் படை உருவாக்கி போராட்டம் நடத்துகிறார்கள்.

- Advertisement -

முதல் பாகம்:

இதனால் அரசாங்கம், மக்கள் படையை முழுமையாக ஒலித்துக் கட்ட ஒரு சிறப்பு படையை ஏற்பாடு செய்கிறது. மக்கள் படை மற்றும் சிறப்பு போலீஸ் படை இடையே நடக்கும் போராட்டத்தினால் பல உயிர்கள் இழக்க நேரிடுகிறது. பல ஆண்டுகளாக இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சிறப்பு படையில் ஜீப் டிரைவராக கதையின் நாயகன் சூரி வருகிறார். இந்த சமயத்தில் தான் மலைப்பகுதியில் வாழும் பவானிக்கும் சூரிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இவர்களுடைய காதல் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் பெருமாள் வாத்தியாரை போலீஸ் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியை போலீஸ் பிடித்து விடுகிறது. இத்துடன் முதல் பகுதி முடிகிறது.

இரண்டாம் பாகம்:

இரண்டாம் பகுதியில் போலீஸ் கட்டுப்பாட்டில் விஜய் சேதுபதி வருகிறார். அவரிடம் போலீசார் மும்முரமாக விசாரணை நடத்துகிறார்கள். பின் அவரை வேறு ஒரு இடத்திற்கு சூரி அழைத்து செல்கிறார். அப்போது ஒரு காட்டுக்குள் இவர்கள் இருவரும் சிக்கிக் கொள்வார்கள். எந்த பக்கம் போவது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் விஜய் சேதுபதி தன்னுடைய கதையை சொல்கிறார். கிராமத்துக்கு எதிராக, தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் கொடுமை, அடுத்த தலைமுறைக்கு நடக்க கூடாது என்பதற்காக கென் ஒரு கொலை செய்கிறார். இதனால் விஜய் சேதுபதி அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார்.

-விளம்பரம்-

போலீஸ் நம்பிக்கை கொடுத்ததால் விஜய் சேதுபதியும் கென்னை ஒப்படைக்கிறார். ஆனால், போலீஸ் துரோகம் செய்ததால் கென்னையும் அவருடைய மனைவியையும் பண்ணை வீட்டாளர்கள் கொலை செய்கிறார்கள். இந்த சமயத்தில் விஜய் சேதுபதிக்கும் உயிர் போகும் நிலைமை வருகிறது. விஜய் சேதுபதியை அவர் நண்பர் காப்பாற்றுகிறார். அதன் பிறகு அவர் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கிறார். இந்த சமயத்தில் தான் மஞ்சுவாரியரை சந்தித்து காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தன்னுடைய உயிருக்க உயிராக இருக்கும் நண்பனை கொலை செய்து விடுகிறார்கள். இதனால் விஜய் சேதுபதி பழிவாங்க போகிறார்.

அதற்குப்பின் என்ன நடந்தது? விஜய் சேதுபதி போலீஸ் பீடியில் இருந்து தப்பித்தாரா? சூரி என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதி கதை. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் சிறப்பாக எடுத்து இருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாகத்தில் என்ட்ரி கொடுத்த தமிழ் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் மிரட்டி வைத்திருக்கிறது. முதல் பாகத்தில் கதை முழுக்க சூரி சுமந்து இருப்பார், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி சுமந்து சென்றிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக விஜய் சேதுபதி என்னென்ன செய்கிறார் என்பதை அழகாக காண்பித்திருக்கிறார்.

ஒவ்வொரு நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள். வசனம், இயக்கம், திரைக்கதை என எல்லாத்திலேயுமே வெற்றிமாறன் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக இந்த இரண்டாம் பாகத்தில் அழுத்தமான கருத்தை இயக்குனர் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அது மிகப்பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இளையராஜாவின் பாடல்களும், பின்னணிசையும் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால், டப்பிங் தான் சில இடங்களில் சொதப்பி இருக்கிறது. மொத்தத்தில் ஒரு அருமையான படமாக விடுதலை 2 இருக்கிறது.

நிறை:

வெற்றிமாறன் இயக்கம், வசனம் அருமை

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்கிறார்.

விஜய் சேதுபதி மிரட்டி இருக்கிறார்

பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

அழுத்தமான கருத்துக்கள்

உண்மை சம்பவத்தை சிறப்பாக சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய உண்டு

குறை:

இடைவெளிக்குப் பின் சில இடங்களில் சின்ன சின்ன குழப்பங்கள்

டப்பிங் சில இடங்களில் சொதப்பி இருக்கிறது.

மற்றபடி குறைகள் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

இறுதி அலசல் :

இது சூரிக்காக எடுத்த படமல்ல விஜய் சேதுபதிக்காக எடுத்தபடம் போல இருக்கிறது. வாத்தியாராக விஜய் சேதுபதி மிரட்டி இருக்கிறார். தத்துவம், அரசியல், என்று தைரியமாக தனது கருத்தை சொல்லி இருக்கிறார் வெற்றி மாறன். இது படம் என்பதை தாண்டி வெற்றிமாறனின் மிகப்பெரிய ஆவண படம் என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் விடுதலை 2 – புரட்சி

Advertisement