இந்து மதத்தின் புனிதத்தை இழிவு படுத்தினரா நடிகர் விஜய் சேதுபதி.! அவரே வெளிட்ட ஆதாரம்.!

0
814
Vijay-sethupathi

தமிழ் சினிமாவில் சீரோ ஹேட்டர்ஸ் உள்ள நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு முக்கிய இடமுண்டு. ரஜினி, விஜய், அஜித் என்று யாருடைய ரசிகர்களாக இருந்தாலும் விஜய் சேதுபதியை பிடிக்காதே ஆளே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்க்கு எதர்மான ஒரு நல்ல நடிகர் மற்றும் மனிதரும் கூட.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி ஒரு டிஜிட்டல் படம் ஒன்று வைரலாகப் பகிரப்பட்டு வந்தது. தான் அப்படிப் பேசவில்லை என்றும் பகிரப்பட்டு வரும் படம் போட்டோஷாப் செய்தது என்றும் நிரூபிக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

- Advertisement -

விஜய் சேதுபதி கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி குறித்து, காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது விஜய் சேதுபதி, `காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி, இந்த `டிஜிகாப்’ செயலி மூலம் குறையும்” என்றார். இதைப் பிரபல செய்தி தொலைக்காட்சி பதிவிட்டது.

இதனை வேறு சில மர்ம நபர்கள் விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்கு மாறாக பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை போட்டோஷாப் மூலம் வைத்துள்ளனர். அதை சில சமூக வலைதள பக்கங்கள் விஜய் சேதுபதியின் கருத்து போல் பதிவிட்டிருந்தன.

-விளம்பரம்-

இதற்கு நிறைய எதிர்மறை கருத்துகள் வந்த வண்ணம் இருக்க, இச்செய்தியை அறிந்த விஜய் சேதுபதி தனது முக நூலில் விளக்கம் அளித்துள்ளார். அதில், செய்தி நிறுவனத்தின் உண்மைச் செய்தியையும், விஷமிகள் பரப்பிவிட்டு போட்டோ ஷாப் கருத்தையும் பதிவிட்டு விடியோவுடன் விளக்கமளித்துள்ளார் விஜய் சேதுபதி.

Advertisement