விஜய் 64 வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி .! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா.!

0
1618
Vijay-64
- Advertisement -

தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.மேலும்,அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள ‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார்.

-விளம்பரம்-
Image result for vijay sethupathi in vijay 64

இந்த படத்திற்கான நடிகர்களையும், நடிகைகளையும் தேர்வு செய்து வருகிறார் என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். விஜய் அவர்கள் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார் . இந்தநிலையில் “தளபதி 64” படத்தின் படபிடிப்பு அவர் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தவுடனே தொடங்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தார்கள். மேலும், இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியே வந்தவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்படுத்துகிறது.

இதையும் பாருங்க : முகென் கூட இல்லையாம் அபிராமிக்கு இவர் தான் இறுதி போட்டிக்கு வர வேண்டுமாம்.!

- Advertisement -

சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிகரமாக வசூலை அள்ளித்தந்த பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி அவர்கள் நடித்திருந்தார்.விஜய் சேதுபதி பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த வரிசையில் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என்ற தெரிந்தவுடன் ரசிகர்களிடையே ஆர்ப்பாட்டத்தையும் , உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் “தளபதி 64” படம் ஒரு மெகா சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரசிகர்கள் கருத்தை இணையங்களில் தெரிவிக்கின்றனர்.

Image result for vijay sethupathi in vijay 64

இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்றும், அதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார் என்ற தகவலும் வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் இடையே பல எதிர்பார்ப்புகள் இருக்க படுகின்றன. ஒரு படத்தில் ஒரு மாஸ் ஹீரோ இருந்தாலே செமயா இருக்கும்.அதுவும் இந்த படத்தில் ரெண்டு ஹீரோக்கள் ஒரு கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல, வேற லெவல படம் சூப்பரா இருக்கும். அதுக்கேத்தவாறு மக்களின் மனதைக் கவர்ந்த விஜய், விஜய்சேதுபதி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த தளபதி 64 படம் மெகா ஹிட்டாக போகிறது என்று கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும் இந்த படத்தை குறித்து பல விமர்சனங்கள்இருக்கின்றன.மேலும், ரசிகர்கள் தளபதி 64 என்ற ஹேஷ்டேக் உருவாக்கி விஜய் மட்டும் விஜய் சேதுபதி அவர்களின் படம் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.தல ?தளபதி ?போய் விஜயா?விஜய் சேதுபதியா ?என்று கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழ போகிறது என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement