ஹீரோவாகும் முன் விஜய் சேதுபதி இத்தனை படங்களில் நடித்துள்ளாரா, அதில் ஒரு சீரியல் வேற. இதோ புகைப்படங்கள்.

0
275
vjs
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். இவர் என்றென்றும் மக்களின் செல்வனாக திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.

-விளம்பரம்-
Vijaysethupathi

தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் இவர் குறும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்குப்பிறகு 2000 ஆண்டுகளில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

இவரை நடிகராக தான் பார்த்திருப்போம். ஆனால், பல படங்களில் இவர் யாருக்கும் தெரியாத வகையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. அந்த படங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி:

இயக்குனர் ராஜா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இந்தப் படம் தெலுங்கில் வெளியான “அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி” என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். இந்த படத்தில் ஜெயம்ரவி, அசின், பிரகாஷ்ராஜ், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி வந்திருப்பார். அதுவும் அந்த படத்தில் அவரது தலை மட்டும் தான் தெரிந்திருக்கும்.2006ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் பெண். இந்த சீரியலில் சீதா, மீரா வாசுதேவன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இது தான் விஜய் சேதுபதி நடித்த முதல் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

புதுப்பேட்டை:

செல்வராகவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம் புதுக்கோட்டை. இந்த படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதி சில காட்சிகளில் நடித்திருப்பார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

பெண்:

2006ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் பெண். இந்த சீரியலில் சீதா, மீரா வாசுதேவன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இது தான் விஜய் சேதுபதி நடித்த முதல் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

லீ :

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த படம் லீ. இந்த படத்தில் சிபிராஜ், பிரகாஷ்ராஜ், நிலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு காட்சியில் வந்திருப்பார்.

வெண்ணிலா கபடிக் குழு :

சுசீந்திரன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்த படம் வெண்ணிலா கபடி குழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார்.

நான் மகான் அல்ல:

சுசீந்திரன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் மகான் அல்ல. இந்த படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திலும் விஜய் சேதுபதி ஒரு சில காட்சிகளில் வந்து இருப்பார்.

பலே பாண்டியா:

2010ஆம் ஆண்டு இயக்குனர் சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் பலே பாண்டியா. இந்த படம் ஆக்ஷன், நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், வையாபுரி, பியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார்.

Advertisement