திடிரென விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்.! என்ன பேசினார் தெரியுமா..?

0
905
vijay

தமிழ் சினிமாவில் மாபெரும் துருவமாக இருந்து வரும் நடிகர் விஜய், இந்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி தனது 48 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இவரது பிறந்தநாளை விஜய்யின் ரசிகர்கள் இப்போதிருந்தே கொண்டாடி வருகின்றனர் . இந்நிலையில் விஜய்க்கு தற்போதே அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்குளை கூறியுள்ளார் நடிகர் சிவ கார்த்திகேயன்.

vijay actor

நடிகர் சிவகார்திகேயன் தல மற்றும் தளப்பதியின் தீவிர ரசிகர். அவரது பெரும்பாலான படங்களில் இவர்கள் இருவரை பற்றிய ரெபரன்ஸ் அதிகம் இடம்பெற்றிருக்கும். தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் பொன்ராயன் இயக்கத்தில் ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் படமாக்க பட்டுள்ளது. அதே போல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி62 ‘ படத்தின் படபிடிப்புகளும் பின்னி மில்லின் அடுத்து பகுதியில் நடந்துள்ளது. இதனை அறிந்த சிவகார்த்திகேயன் நடிகர் விஜய்யை பார்க்க நேரில் சென்றுள்ளார்.

sivakarthikeyan

விஜய்யை நேரில் சந்தித்து நாளை மறுதினம் வர விருக்கும் அவரது பிறந்த நாளிற்க்கு சிவகர்திகேயன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதற்கு நடிகர் விஜய் , சிவகார்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் இருவரும் சினிமா குறித்த சில செய்திகள் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இந்த இனிமையான நிகழ்வு சினிமா நடிகர்களிடையே உள்ள ஆரோக்கியமான பந்தத்தை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது என்று இரு நடிகர்களின் ரசிகர்கள் சற்று பெருமை கொள்ளலாம்.