பாட்டு கேட்டுகொண்டே காரை ஒட்டி செல்லும் விஜய்யின் மகன் – வெளியான லேட்டஸ்ட் வீடியோ.

0
19744
sanjai
- Advertisement -

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துஉள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

-விளம்பரம்-

வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : பூவே உனக்காக படத்தில் பணியாற்றியவரையே திருமணம் செய்து கொண்ட சங்கீதா. அட, இவரு சிம்பு பட இயக்குநராச்சே.

- Advertisement -

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த ‘சிரி ‘ என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சஞ்சய்யின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கார் ஓடிக்கொண்டே படு ஹாயாக பாடல் கேட்டுக்கொண்டு காரையும் ஒட்டி செல்கிறார்.

இதுஒருபுரம் இருக்க சஞ்சய் சினிமாவில் நடிக்க போகிறார் என்று விஜய் குடும்பத்தின் நெருங்கிய ரசிகரான மகேஷ் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். விஜய்யின் தீவிர ரசிகரான மகேஷ் வீட்டிற்கு விஜய்யின் பெற்றோர்கள் அடிக்கடி செல்வதும் வழக்கம். சமீபித்தில் கூட இவரது வீட்டிற்கு சென்ற ஷோபனா சமையல் கூட செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தொலைபேசி பேட்டி ஒன்றில் பங்கேற்ற மகேஷ், விஜய்யின் மகன் சஞ்சய் இந்த வருட இறுதியில் கனடாவில் தனது படிப்பை முடிக்கிறார். அடுத்த வருடமே சினிமாவில் அவர் மாஸ் எண்ட்ரீ கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement