கிரிக்கெட்டும் இல்லை நடிகரும் இல்லை.! தொகுப்பாளராக விஜய்யின் மகன்.!முதல் நேர்காணல்.!

0
333
Vijjay-son-sanjay

தமிழ் சினிமாவின் இளையதளபதி விஜய்க்கு சஞ்சய் மற்றும் ஷாஷா என்று இரு பிள்ளைகள் இருப்பது தெரியும். இதில் மகன் சஞ்சய், விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமும் ஆடியிருந்தார்.

சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் சஞ்சைக்கு தனியாக ஒரு கிரிக்கெட் கோச் வைத்து அவருக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுகிறார் விஜய். தற்போது 17 வயதாகும் சஞ்சய் இன்னும் சில காலத்தில் தமிழக ரஞ்சி அணியில் ஆட வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.

சமீபத்தில் சஞ்சய் நடித்த முதல் குறும்படமாக ‘ஜங்க்ஷன்’ என்னும் குறும்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் சஞ்சய், முதன் முறையாக நேர்காணல் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதில் தமிழில் இருமுகன், நோட்டா போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் என்பவரை நேர்காணல் செய்துள்ளார்.