இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்த நிலையில் தற்போது இந்த கூட்டத்தில் விஜய் பேசிய சில விஷயங்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

Advertisement

விஜய் மக்கள் இயக்கம்:

அந்த வகையில் இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவற்றை மேடையிலேயே நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

விஜய் நடத்திய விழா:

மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிகழ்வின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் செய்கிறார் என்றெல்லாம் பல தரப்பினர் மத்தியில் கருத்துக்கள் வந்தது. பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தொகுதி வாரியாக மக்கள் இயக்கத்தை பலப்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்தி இருப்பது தகவல் வெளியாகி இருந்தது.

Advertisement

என்ன பேசினார் விஜய் :

இப்படி ஒரு நிலையில் இந்த கூட்டத்தில் நடிகர் விடை மன்ற நிர்வாக இடம் பேசிய சில விஷயங்கள் மட்டும் தற்போது வெளியாகி இருக்கிறது அதில் குறிப்பாக அரசியலில் இறங்குவது என்றால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். முழுமையாக அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என்று விஜய் கூறியதாக மன்ற நிர்வாகிகள் சிலர் கூறியிருக்கிறார்கள். மேலும் விஜயன் அரசியல் வருகைக்காக அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம்.

Advertisement

கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம்

அவர் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம் விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் அரசியலைப் பொறுத்தவரை ரஜினி அஜித் ரசிகர்கள் கூட அனைத்து ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது என்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறி இருக்கிறார்கள். இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகி இருப்பதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement