இந்த நாளை கொண்டாடுங்கள் பெண்களே. பிரியங்கா வழக்கின் என்கௌண்டர் குறித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா.

0
3640
nayanthara
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெண் மருத்துவர் ஒருவர் கற்பழித்து எரிக்கப்பட்ட சமத்துவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் சம்மந்தபட்ட முகமது பாஷா, கேசவலு, நவீன், சிவா ஆகிய 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், நேற்று (டிசம்பர் 7 )நள்ளிரவு3.30 மணி முதல் 5 மணி அளவில் சட்டன்பள்ளி பைபாஸில் அதாவது பிரியங்காவின் உடல் எரிந்து கிடந்த அதே இடத்தில் குற்றவாளிகளை அழைத்துச் சென்று பிரியங்காவை எப்படி கொலை செய்தார்கள் என்பதை விவரித்து காட்ட சொல்லி இருக்கிறார்கள். அப்போது அந்த 4 பேரும் தப்பி செல்ல முயன்றதால் அவர்களை என்கௌண்டர் செய்ததாக போலீஸ் தெரிவித்து இருந்தது.

-விளம்பரம்-

பிரியங்கா மரணத்திற்கு காரணமாக இருந்த அந்த 4 பேரும் கொல்லப்பட்டதை அடுத்து ஹைதராபாத் காவல் துறையினரை நாடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. அதே போல பெண்களை கற்பழிக்கும் நயவஞ்சகர்களுக்கு இது போன்று தான் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், #JusticeReservedForPriyanka #JusticeReserved #JusticeForPriyanka போன்ற பல்வேறு ஹேஷ் டேக்குகளை உருவாக்கி நேற்று முதல் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தும் வருகின்றனர். அதே போல பிரியங்காவின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் கொள்ளப்பட்டத்தை அடுத்து பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்

இதையும் பாருங்க :குழந்தைக்கு தாயான நிலையில் பொது நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்பரண்ட் ஆடையில் வந்த சூடான கோழி நிகிதா.

- Advertisement -

. இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிரியங்கா வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை இந்தக் கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கான காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான, சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக பாதுகாப்பையும் உறுதி செய்வது நமது கடமை.

இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி இதுவே நியாயமான மனித அமைக்க நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன் நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை தேதியை பெண்களுக்கு சரியான ஞாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பெண்களுக்கு இது சற்று ஆறுதல் அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சரணம் பயம் தரும் என்று குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா

-விளம்பரம்-
Advertisement