பெரும் சர்ச்சையை கிளப்பிய சைக்கிள் பயணம் – ஓட்டு போட்ட கையோடு ஜூட் விட்டுள்ள விஜய். அதுவும் எங்கு ? எதற்கு தெரியுமா ? புகைப்படம் இதோ.

0
1121
- Advertisement -

ஓட்டு போட்ட கையோடு ஜூட் விட்டுள்ளார் நடிகர் விஜய். தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்றுமுடிந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டுஇருந்தது . தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

-விளம்பரம்-

இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் நேற்று பல்வேறு மக்களும் ஆவலுடன் வாக்களித்தனர். அதே போல நடிகர் அஜித், ரசிகரின் செல்போனை புடுங்கியது, விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது என்று பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது. அதிலும் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது தான் சமூக வலைதளத்தில் பேசும் பொருளானது.

இதையும் பாருங்க : இப்படி நடந்தத பாக்கவே சோகமா இருக்கு – அஜித் செல்பி சர்ச்சை குறித்து டிடி போட்ட பதிவு.

- Advertisement -

நடிகர் விஜய் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் 7 வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்துவதர்க்காக தனது வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு சைக்கிளில் சென்றார். விஜய் ஏன் சைக்கிளில சென்று வாக்களித்துள்ள இந்த விஷயம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளானது.நடிகர் விஜய் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிகாட்டும் விதமாக தான் இப்படி செய்தார் என்றும் தேர்தலில் வாக்களிக்க அனைத்து மக்களிடமும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த தான் விஜய் இப்படி சேர்த்தார் என்றும் சமூக வலைதளத்தில் பல விதமான காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், நடிகர் விஜய்யின் வீடு வாக்குச் சாவடிக்கு மிகவும் அருகில் இருந்ததால் தான் நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்று விஜய்யின் PRO தெரிவித்தார். இப்படி பல சர்ச்சைகளை கிளப்பிவிட்டு நடிகர் விஜய் வெளிநாடு பறந்துள்ளார். நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த படத்திற்காக நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றுள்ளாரா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement