விஜய் இரண்டு நாட்கள் மட்டுமே நடித்து கைவிடுத்த படம்..!பின்னர் ஹீரோவானது சூர்யா தான்..!

0
687
Vijaysurya

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான லைலா தமிழ் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித்,சூர்யா,விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்த நடிகை லைலா.”தில், தீனா, மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

Vijaylaila

அஜித்துடன் ‘தீனா’,’பரமசிவன்’ என்று இரண்டு படங்களில் நடித்த லைலா, சூர்யாவுடன் ‘உன்னை நினைத்து’ படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் முதன் முதலில் நடிகர் விஜய் தான் நடிக்கவிருந்தாராம்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து தெரிவித்த நடிகை லைலா, உன்னை நினைத்து’ படத்துல முதலில் விஜய் சார்தான் ஹீரோவா கமிட்டாகியிருந்தார். அந்தப் படத்துக்காக ஒரு பாடலை ரெண்டுநாள் ஷூட் பண்ணாங்க. பிறகு சில பிரச்னைகளால விஜய் அந்தப் படத்துல விஜய் சார் நடிக்கல.

நான் அவர்கிட்ட, ‘உங்க ஒருத்தரோடதான் ஷூட்டிங் வரைக்கும் வந்து என்னால நடிக்க முடியாமப்போச்சு. கண்டிப்பா ஒருநாள் உங்ககூட நடிப்பேன்’னு அடிக்கடி சொல்லியிருக்கேன். அது இப்போவரை நடக்கலை. செகண்ட் இன்னிங்ஸ்ல லக் இருக்கான்னு பார்ப்போம் என்று கூறியுள்ளார் லைலா.