பெண்கள் ஆடையை விமர்சித்த விஜய் – சூர்யாவின் பட காட்சிகளை பகிர்ந்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

0
407
vijaysurya
- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் வரிசையில் இருப்பவர்கள் விஜய் மற்றும் சூர்யா. சொல்லப்போனால் சூர்யா அறிமுகமானதே விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தின் மூலம் தான். அந்த படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து ‘பிரெண்ட்ஸ்’ படத்திலும் நடித்து இருக்கின்றனர். அது போக இவர்கள் இருவருமே ஒரே கல்லுரியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பு இன்று வரை இருவருமே தொண்டர்ந்து தான் வருகின்றனர். என்னதான் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தாலும் இவர்கள் இருவரின் ரசிகர்கள் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விஜய் நடித்த சிவகாசி படத்தில் பெண்கள் ஆடை குறித்து விஜய் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து சூர்யாவின் ரசிகர்கள் பலர் விஜய்யை கேலி செய்து இருக்கின்றனர். திருப்பாச்சி படத்தின் வெற்றியை தொடர்ந்து பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த படம் சிவகாசி. இந்த படமும் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்து இருப்பார்.

- Advertisement -

சிவகாசி பட காட்சி :

இந்த படத்தின் ஒரு காட்சியில் நடிகர் விஜய், அசின் அணிந்து இருக்கும் ஆடையை குறிப்பிட்டு பிரா, ஜட்டி என்று படு கொச்சையாக பேசி இருப்பார். இந்த வீடியோவை தற்போது ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்து ‘இந்த காட்சியை நான் முழுவதுமாக வெறுக்கிறேன், உண்மையில் இதன் மூலம் அவர் எதாவது செய்துவிட்டதாக நினைத்துவிட்டாரா’ என்று பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவியது.

மாஸ்டர் பட காட்சி மூலம் பதிலடி :

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் விஜய், மாஸ்டர் படத்தில் பெண்கள் சுதந்திரம் குறித்து பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கின்றனர். மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் சவிதாவிடம் (கௌரி கிஷன்) தவறாக நடந்து கொண்டதால் இரண்டு இளைஞ்சர்களை விஜய் அடித்து இருந்ததால் விஜய்யை கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டிக்கும். அப்போது பெண்களை ஆண்களோடு பழக விடுவதாலும் பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ஆடை அணிவதாலும் தான் அவர்கள் சவிதாவை அப்படி செய்தார்கள் என்று ஒரு ஆசிரியை கூறுவார்.

-விளம்பரம்-

சர்ச்சையான சூர்யா பட காட்சி :

அதற்கு விஜய் பெண்கள் அணியும் ஆடையை குறை சொல்லும் முன் ஆண்களுக்கு எப்படி ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் என்று அறிவுறுத்துவார். ஆடை பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்து மீறல்களை பற்றி சொன்ன இந்த காட்சியை படத்தில் வைக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க சூர்யாவும் இதே போல பெண்கள் ஆடை குறித்து அபத்தமாக பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

பெண்கள் ஆடை குறித்து சூர்யா :

சூர்யா நடித்த வேல் படத்தின் ஒரு காட்சியில் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை பார்த்து ‘அந்த பொண்ணுங்கள பாருங், புருஷன் பாக்குற உடம்ப இப்படி எல்லாருக்கும் காட்றாங்க. கேட்டா கல்ச்சர் டெவலப் ஆகிடிச்சினு சொல்றாங்க. ஆம்பளைங்க கல்ச்சர் டெவலப் ஆகிடிச்சினு வேஷ்டியில் இருந்து பேண்டுக்கு தான் மாறி இருக்காங்க. இப்படி அரைகுறையா சுத்தி பாத்து இருக்கீங்களா’ என்று அந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது.

Advertisement