தெறி படத்தில் சமந்தாவின் தங்கையாக நடித்த நடிகை நடித்துள்ள படம். ட்ரைலரை வெளியிட்டுள்ளது யாரு பாருங்க.

0
3507
ayra
- Advertisement -

இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தெறி. இந்த படத்தில் விஜய், எமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருந்தார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் இந்த படத்தில் சமந்தாவிற்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த அயரா தற்போது இவர் கேர் ஆப் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டு உள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

அயரா அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் மாடலும் ஆவார். இவர் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலாக விஜயின் தெறி படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் பல்லவி ராதாகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு இவர் சகா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் வெளிவந்த யாயும் பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த பாடலை 15 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து உள்ளார்கள்.

- Advertisement -

இந்த ஒரு பாடல் மூலம் இவர் பிரபலமானர். அதனைத் தொடர்ந்து இவர் நுங்கம்பாக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் கேர் ஆஃப் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை ராஜசேகர், ஜீவன் கார்த்திகேயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஸ்வீகேர் அகஸ்தி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் தீபன், வெற்றி, மும்தாஸ், அயரா, கார்த்திக் ரத்னம், சோனியா கிரி, நிஷேஷ், ஸ்வேதா நடிக்கிறார்கள். மேலும், பசங்க 2 படத்தில் நடித்த நிஷேஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியானது. காதலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படத்தின் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement