ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு Rolls Royce கார எடுத்துட்டு வந்தாரு – பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டியுள்ள விஜய்.

0
617
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Beast Aparna Das Posed In Towel | பீஸ்ட் அபர்ணா தாஸ்

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அபர்ணா தாஸ் பிறந்தநாள் :

மேலும், இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள அபர்ணா தாஸ் கேட்டதற்காக பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது Rolls Royce காரை எடுத்து சென்று இருக்கிறார் விஜய். பீஸ்ட் படத்தின் பூஜையில் இருந்தே அபர்ணா தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

Rolls Royce எடுத்து சென்றுள்ள விஜய் :

பீஸ்ட் படத்தில் அபர்ணா அவர்கள் தளபதி விஜயின் தங்கையாக நடிக்கிறாராம். இந்த நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது தனது பிறந்தநாளை கொண்டாடிய அபர்ணா தாஸுக்கு விஜய் வாழ்த்துக்களை கூறி இருக்கிறார். அப்போது தனது rolls royce காரில் ஒரு ரவுண்டு கூட்டிபோங்க என்று விஜய்யிடம் கேட்டுள்ளனர். விஜய்யும் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை எடுத்துவந்து நாயகி பூஜா ஹெக்டே, நெல்சன், மனோஜ், அபர்ணா ஆகியோரை ஒரு ரவுண்டு கூட்டி போய் இருக்கிறார்.

-விளம்பரம்-

பீஸ்ட் மூலம் பிரபலமடைந்த அபர்ணா :

நடிகை அபர்ணா தாஸ் அவர்கள் ஏற்கனவே மலையாளத்தில் பகத் பாசிலுடன் ஞானப்பிரகாசன் மற்றும் வினித் சீனிவாசனுடன் மனோகரம் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால், பீஸ்ட் தான் இவருக்கு முதல் தமிழ் படம். இப்படி ஒரு நிலையில் இவர் தமிழில் நாயகியாக கமிட் ஆகி இருக்கிறார். அதுவும் தன் முதல் தமிழ் படத்திலேயே கவினுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம் அபர்ணா.

Bigg Boss Kavin And Aparna Das | கவின் அபர்ணா தாஸ்

கவின் படத்தில் வாய்ப்பு :

ஊர் குருவி படத்தை தொடர்ந்து நடிகர் கவின், தற்போது இயக்குநர்  கணேஷ்  பாபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் தான் அபர்ணா நாயகியாக நடிக்க இருக்கிறார். படத்தை அம்பேத்குமார் தயாரிக்கிறார். 2K கிட்ஸின்  ரசனைக்கு ஏற்ற காதல் கதையாக மேலும்  முக்கிய அம்சமாக இது  கேளிக்கையுடன் கூடிய திரைப்படமாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது

Advertisement