த்ரிஷா போட்ட ஒரு பதிவால் எழுந்த சர்ச்சை – விஜய்யுடன் இணைத்து சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்

0
457
- Advertisement -

த்ரிஷா பதிவிட்ட புகைப்படத்தால் விஜயின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் தான் நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். அதோடு தன் கட்சியின் நிர்வாகிகளும், ரசிகர்களும் பல திட்டங்களை போட்டு இருந்தார்கள். விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஐந்து திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ் மகன் ஆகிய ஐந்து படங்கள் தான் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

த்ரிஷா பதிவு:

பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் விஜய்யின் பிறந்தநாளுக்கு நடிகை த்ரிஷாவும் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், த்ரிஷா விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நீதான் என் காதல் சாகும் வரை, நீதான் என் காதல் என்ற வரிகள் வரும் ஆங்கில பாடலையும் பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் விஜய், த்ரிஷா இருவரின் பழைய புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

த்ரிஷா-விஜய் சர்ச்சை:

குறிப்பாக, ஒரு புகைப்படத்தில் த்ரிஷா பக்கத்தில் ஒரு கால் ஷூ இருக்கும் போட்டோ தான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. அதில் விஜய் அணிந்திருந்த அதே சூ போல் த்ரிஷா அருகில் அமர்ந்திருக்கும் நபரின் காலிலும் இருக்கிறது. இதனால் விஜய், த்ரிஷாவும் தான் சேர்ந்து எடுத்த புகைப்படம். இவர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வது உண்மை தான் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.

விஜய்- சங்கீதா பிரிவு:

ஏற்கனவே விஜய்- சங்கீதா இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்றும் த்ரிஷாவை விஜய் காதலிக்கிறார் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அதற்கேற்ப சங்கீதாவும் சமீப காலமாகவே விஜயின் படத்தின் பிரமோஷனில் சங்கீதா கலந்து கொள்வதில்லை. ‘லியோ’ படத்திலிருந்து த்ரிஷா-விஜய் இருவருமே வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ‘கோட்’ படத்திலும் த்ரிஷா ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

நெட்டிசன்கள் கருத்து:

இதனால் இருவருமே அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இப்படி விஜய்- த்ரிஷா குறித்த விவகாரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதால் இது விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் விஜய் அவர்கள் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் அறிவித்திருந்தார். கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான வேலைகளில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய்- த்ரிஷா குறித்த விவகாரம் உங்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு பங்கத்தை ஏற்படுத்தும். இதற்கு விஜய் விளக்கம் கொடுப்பது நல்லது என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement