நீங்க தமிழ்நாட்டுலதான இருக்கீங்க? ஆண்ட்ரியாவை கலாய்த்துள்ள விஜய்.

0
25459

இளைய தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோஹனனும், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஆண்ரியா, முதன் முறையாக விஜயுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ஆண்ட்ரியா, இந்த படத்தின் சுவாரசியமான சம்பவம் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

Andrea shares an exciting update on Master! - Tamil News ...

அதில் , றைய பேர் என்கிட்ட வந்து, ‘விஜய் சார் படம் எப்போ பண்ணுவீங்க?’ன்னு கேட்டுட்டே இருப்பாங்க. அவங்க நான் ‘மாஸ்டர்’ல இருந்தா சந்தோஷப்படுவாங்கல்ல? அதுக்காகத்தான். ‘மாஸ்டர்’ என்னுடைய ரசிகர்களுக்காக நான் நடிக்கிற படம். ஷூட்டிங் ஸ்பாட்ல பயங்கர விஜய் ரசிகை ஆகிட்டேன். படத்துல ஒரு கார் சேஸிங் சீன். அது பார்க்கும்போது உங்களுக்கே தெரியும், எந்த அளவுக்கு எனக்கு மறக்க முடியாத அனுபவமா அது இருந்திருக்கும்னு.

- Advertisement -

ஷூட்டிங் ஸ்பாட்ல விஜய் சார் ‘வெறித்தனம்’ பாட்டு பத்திப் பேசிட்டிருந்தார். அதுக்கு முன்னாடி ‘பிகில்’ நான் பார்க்கலை. அவர் பேசினதுக்குப் பிறகுதான் கூகுள் பண்ணிப் பார்த்தேன். அடுத்த நாள் ‘அந்தப் பாட்டு நல்லாப் பாடியிருக்கீங்க’ன்னு நான் சொல்ல, அவர், ‘எந்தப் பாட்டுமா?’ன்னு கேட்க, நான் ‘வெறித்தனம் பாட்டு’ன்னு சொல்ல, அவருக்கு செம ஷாக். ‘ஏம்மா, இப்பதான் அந்தப் பாட்டைக் கேட்கறீங்களா. நீங்க தமிழ்நாட்டுலதான இருக்கீங்க?

நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டு பாடினமே, அதுவாச்சும் கேட்டீங்களா’ன்னு என்னைக் கலாய்ச்சுட்டார். அந்தப் பாட்டு `கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன்’. என்று கூறியுள்ளார் ஆண்ரியா. நடிகை ஆண்ட்ரியாவை போலவே மாஸ்டர் படத்தில் நடித்து வரும் தீனாவும் ‘மாஸ்டர் படத்தில் கார் சேஸ் காட்சிகள் தீயாக இருக்கு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சுசகாக தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement