குழந்தையில் பெண் குழந்தை போல மேக்கப் போட்டு அழகு பார்த்துள்ள ம க பாவின் பெற்றோர்கள் (அக்மார்க் 90ஸ் கிட்ஸ் போல )

0
1732
makapa
- Advertisement -

விஜய் டிவி மூலம் பல தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மா.கா.பா ஆனந்த். மா.கா.பா ஆனந்த் அவர்கள் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். பின் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அந்த கம்பெனியில் வேலை செய்தவர் தான் சுஸினா ஜார்ஜ். சுஸினா பாண்டிசேரியை சேர்ந்தவர். மேலும் அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆவார்.

-விளம்பரம்-

பின் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. மா.கா.பா ஆனந்த் அவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் முதலில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அதற்கு பிறகு ரேடியோ மிர்ச்சி பண்பலையில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். அதாவது இவர் ரேடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.

- Advertisement -

அதற்கு பிறகு ரேடியோ மிர்ச்சி ஆக ஆறு வருடங்கள் பணி புரிந்தார். மா.கா.பா ஆனந்த் அவர்கள் பத்து வருஷம் ஆர்.ஜேவாக இருந்து தான் விஜய் டிவியில் ஆங்கர் ஆனார்.அதற்குப் பிறகு தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், அது இது எது, சினிமா காரம் காபி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

இறுதியாக இவர் தி வால் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது இவர் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமீப காலமாக ம க பா தன்னுடைய பல புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சிறு வயதில் பெண் குழந்தை போல மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த பலர் அக்மார்க் 90ஸ் கிட்ஸ் ம க பா என்று பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement