இனி என்னை அப்படி அழைக்காதீர்கள் – நயன்தாரா முடிவால் அறந்தாங்கி நிஷா எடுத்த அதிரடி முடிவு

0
156
- Advertisement -

நயன்தாராவை தொடர்ந்து தன் பட்டத்தை அறந்தாங்கி நிஷா நிராகரித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மீடியாவில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் பாலிவுட்டில் நயன் நடித்த ஜவான் படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது. அதை அடுத்து கடைசியாக நயன் நடித்த ‘அன்னபூரணி’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2, டியர் ஸ்டுடென்ட்ஸ் என பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

- Advertisement -

நயன்தாரா அறிக்கை:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், என்னுடைய வாழ்க்கை எப்போதுமே ஒரு சிறந்த புத்தகமாகவே இருக்கிறது. உங்களுடைய நிச்சயமற்ற அன்பும் ஆதரவும் தான் அதற்கு அழகு சேர்த்திருக்கிறது. என்னுடைய வெற்றியின் போது என் தோளில் சாய்ந்து பாராட்டியதோடு, கஷ்டமான நேரங்களிலும் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் பலரும் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வாழ்த்து இருக்கிறீர்கள்.

நயன் வைத்த கோரிக்கை:

உங்கள் பேர் ஆதரவால் தான் இந்த பெயர் எனக்கு வந்தது. இந்த பட்டத்திற்கு நான் ரொம்பவே கடமைப்பட்டு இருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். காரணம் என் பெயர்தான் எனக்கு ரொம்ப நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு தனி நபராகவும் பட்டங்களும், விருதுகளும் மதிப்பு மிக்கவைதான். ஆனால், சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையில் இருந்து நம் கலை தொழிலில் இருந்து உங்கள் அன்பான தொடர்பில் இருந்தும் பிரிக்கக்கூடும் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அறந்தாங்கி நிஷா சொன்னது:

நயன்தாராவின் இந்த முடிவுக்கு சிலர் விமர்சித்தாலும், இன்னொரு தரப்பினர் ஆதரவு கொடுக்கிறார்கள். இப்படி இருக்கும்போது அறந்தாங்கி நிஷா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சின்னத்திரை நயன்தாரா என்று தான் அறந்தாங்கி நிஷாவை எல்லோரும் அழைக்கிறார்கள். இதனால் அறந்தாங்கி நிஷா, இனிமேல் என்னை யாரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்க வேண்டாம் என கூறியிருக்கிறார். காரணம், நயன்தாராவின் முடிவால் தான் அறந்தாங்கி நிஷா இப்படி கூறியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அறந்தாங்கி நிஷா குறித்த தகவல்:

சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர். தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Advertisement