பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? முழு விவரம் இதோ.

0
81013
bharathi

தற்போது இருக்கும் கால கட்டங்களில் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் படங்களை ரசிப்பதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிக்கும் மக்கள் தான் அதிகமாக உள்ளனர். அந்த வகையில் தற்போது போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு சேனல்களிலும் தொடர்களை அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் சேனல் நிறுவனம். இதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுமே தூள் கிளப்புகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஒளிபரப்பாக துவங்கிய “பாரதி கண்ணம்மா” சீரியல் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது.

May be an image of 7 people, people sitting and people standing

ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக சென்று கொண்டு இருந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது. அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர்.

இதையும் பாருங்க : சிறு வயதில் நான் படித்த செக்** புக்கை என் அம்மா பார்த்துவிட்டு இதை தான் செய்தார் – மிஸ்கின் சொன்ன சுவாரசிய சம்பவம்.

- Advertisement -

இதை தொடர்ந்து இந்த சீரியலின் Trp எகிறியது. ஆனால், சமீப காலமாக இந்த தொடர் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து வருகிறறது. இந்த தொடரில் அருண் பிரசாத், ரோஷினி ஹரிப்பிரியன், ஃபரினா ஆசாத் என்று பலர் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர்களின், ஒருநாள் சம்பளம் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. 

Bharathi Kannamma (2019 TV series) - Wikipedia
  1. ரோஷினி ஹரிபிரியன் (கண்ணம்மா) – ரூ. 20,000
  2. அருண் பிரசாத் (மருத்துவர் பாரதி) – ரூ. 20,000
  3. ரூபா ஸ்ரீ (சௌந்தர்யா) – ரூ. 15, 000
  4. ரிஷி கேசவ் (வேணு) – ரூ. 12, 000
  5. பரீனா (வெண்பா) – ரூ. 10, 000
  6. அகிலன் – ரூ. 10, 000
  7. கண்மணி (அஞ்சலி)- ரூ. 9000
  8. செந்தில் குமாரி (பாக்கியலட்சுமி) – ரூ. 5000
Advertisement