தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி துவங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி களில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.அவர் பதிவிடும் புகைப்படங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட வண்ணம் இருக்கிறது.
சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார். பாவனா தனது உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளை செய்வது வழக்கம்.
மேலும், உடற்பயிற்சி மட்டுமல்லாது யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜிம் உடையில் எடுத்த செல்பி வீடியோ ஒன்றை பதிவிட்ட பாவனா, தனக்கு 3 ஆண்டுகளுக்கு இருந்த இதே போன்ற உடல் வேண்டும் என்று ஏக்கத்தோடு பதிவிட்டுள்ளார்.