விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமாகுவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் என்றாலே டிடி, மாகாபா, பிரியங்கா, ரக்ஷன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்லும்.
ஆனால், மக்களின் மனதை கொள்ளை அடித்த தொகுப்பாளர் என்றால் சிலரே இருப்பார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. ஆரம்பத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாம மக்களுடைய பேவரட் தொகுப்பாளர் என்று பாவனாவை சொல்லலாம்.
பின் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தவுடன் அங்கு சென்று விட்டார். பிறகு விஜய் டிவி பக்கமே வரவில்லை. கிரிக்கெட், படத்தின் இசை நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், பாவனா எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் விஜய் டிவிக்கு நீங்கள் வருவீர்களா? என்று கேள்வி எழுப்பு இருக்கிறார்.
இதுகுறித்து பாவனா கூறியது, இனி நன் விஜய் தொலைகாட்சியில் வரப்போவது இல்லை என்று கூறி இருக்கிறார் மேலும், பாவனா அவர்கள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் Dance Vs Dance 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை விஜய் டிவிக்கும் பாவனாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருக்குமோ? இதனால் தான் வரவில்லையோ? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.