மீடியா துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மீடியா துறையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பாவனா, ரம்யா, டிடி என்று மூவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. பிரியங்கா மட்டும் தான் இன்னும் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
அதை போல பாவனா, விஜய் டிவியை விட்டு விட்டு தற்போது ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளனியாக மாறி விட்டார். இப்படி ஒரு நிலையில் பிரபல தற்காப்பு கலைஞரும் நடிகருமான ஹுசைனியை பாவனா, டிடி ஆகியோர் இண்டர்வியூ செய்ய வேண்டும் என்று பிரபல காமெடி நடிகர் சதிஷ் ட்வீட் செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹுசைனி, தொகுப்பாளர் ஒருவருக்கு தற்காப்பு கலையை செய்து காட்டிய போது அந்த தொகுப்பாளர் வலி தாங்க முடியாமல் மூக்கை பிடித்து கதறினார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இப்பொது இதனை நினைவ கூர்ந்து தான் சதீஸ் இப்படி ட்வீட் போட்டுள்ளார். மேலும், பாவனா மற்றும் சதீஸ் இருவருமே நல்ல நண்பர்கள் தான். இவர்கள் இருவரும் இணைந்து சமூக வலைதளத்தில் வீடியோவை கூட பதிவிட்டு இருக்கின்றனர். இருவருமே அடிக்கடி சமூக வலைதளத்தில் கேலி செய்து கொள்வதும் உண்டு. இப்படி ஒரு நிலையில் ஹுசைனியின் லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் அவர் தொகுப்பாளருக்கு பெண்கள் எப்படி சில சிம்பிளான தற்காப்பு கலை மூலம் தன்னை பாதுகாத்துகொள்வது என்று செய்து காட்டினார்.
முன்பு வெளியான பேட்டியில் தொகுப்பாளரின் மூக்கை டேமேஜ் செய்த ஹுசைனி, இந்த வீடியோவில் அந்த தொகுப்பாளரை கீழேயே விழ வைத்து விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவ, இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் காமெடி நடிகர் சதிஷ்.
மேலும், ஹுசைனி சார், பிரியங்கா, பாவனா, டிடி இவங்களும் உங்கள இண்டெர்வியூ பண்ணனும். உங்க ஸ்டைல்ல ஒன்னு விடுங்க என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் ட்வீட் செய்துள்ள பாவனா, கண்டிப்பா, நான் ரெடி. நீங்க அடிவாங்கற எடுத்துல நில்லுங்க. ஹுசைனி சார் சொல்லி கொடுத்த மாதிரியே நான் ட்ரை பண்றோம் என்று பதிவிட்டுள்ளார்.