விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியல் முடிவுக்கு வர இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புதுப்புது நிகழ்ச்சி சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளி பரப்பி வருகிறார்கள். இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள்.
கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. முதலில் சன் டிவி சேனல் தான் சீரியல்களுக்கு பெயர் வாங்கிய சேனலாக இருந்தது. தற்போது விஜய் டிவியும் சன் டிவிக்கு டஃப் கொடுத்து வருகிறது.
விஜய் டிவி சீரியல்கள்:
சமீபத்தில் டாப் 10 சீரியல்கள் தரவரிசையில் விஜய் டிவி சீரியல்கள் முன்னிலை வகுத்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல் முன்னணி இடத்தை பிடித்திருந்தாலும், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பெண் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. அதிலும் ‘செல்லம்மா’ சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
செல்லம்மா சீரியல்:
இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் அன்ஷிதா மற்றும் அர்னவ் நடித்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக கண்மணி நடித்திருக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகி ஏற்கனவே கல்யாணம் முடித்து ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். பிறகு அவருக்கு தன்னுடைய மாமா பையன் கதாநாயகன் மீது காதல் ஏற்படுகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதைக்களமாக இருக்கிறது. இதற்கு இடையே செல்லம்மாவின் முதல் கணவர் அடிக்கடி வந்து பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறார்.
சீரியல் கதை:
இப்போது, அவரை கொலை செய்துவிட்டார் என்று சொல்லி செல்லம்மா கைது செய்யப்பட்டு இருந்தார். தற்போது இந்த சீரியலில் பல பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் சீரியலும் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த செல்லம்மா சீரியல் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் சிறையில் முடிவுக்கு வர இருக்கிறது. அதனால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
அர்னவ் மற்றும் அக்ஷிதா குறித்து:
ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அர்னவ், அவருடைய குடும்பப் பிரச்சனையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன போது கூட அவருக்கு பதிலாக வேறு கதாநாயகன் வைத்து நடிக்க வைக்காமல் கதையை மாற்றம் செய்தனர். அதேபோல் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் அக்ஷிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.