நேற்று (ஏப்ரல் 6)வாக்கு செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர்களின் செல்போனை அஜித் பிடுங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்றுமுடிந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டுஇருந்தது . தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் வாக்கு பதிவு துவங்கும் முன்னரே வந்து காத்துக்கொண்டு இருந்தனர்.அப்போது செல்போனில் செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை புடிங்கி வைத்துக்கொண்டு பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நபரை அழைத்து மாஸ்க் போட சொல்லி செல் போனை திருப்பிக் கொடுத்தார்.

இதையும் பாருங்க : ஆமாம், என் மார்பகம் பெருசு தான், அதுக்கு காரணம் – கேலிகளால் கடுப்பாகி அபிராமி போட்ட பதிவு.

Advertisement

இந்த சம்பவம் தான் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் அஜித்திற்கு ஏற்கப்பட்ட நிலை குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிடி, அஜித் சார் நடத்தப்பட்ட விதம் மிகவும் சோகமான விசயசம். அவரது ரசிகர்களுக்கு அவர் பல சந்தோசத்தை கொடுத்திருக்கிறார். அதற்கு கைமாறாக அவர் அவரது குடும்பத்துடன் ஒரு அடிப்படை உரிமையான வாக்கை அளிக்க அவரை நிம்மதியாக விடுங்கல். ஆனால், அஜித் சார் நீங்கள் மிகவும் பொறுமைசாலி தான் என்று பதிவிட்டுள்ளார் டிடி.

என்னதான் அஜித், அந்த ரசிகர்கரிடம் போனை திருப்பி கொடுத்தாலும். அஜித், அந்த ரசிகரின் போனை உடைத்துவிட்டார் என்ற வதந்திகள் எழுந்தது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அந்த நபர் அளித்துள்ள விளக்கத்தில், என் மொபைலை 2 நிமிஷம் வாங்கி வெச்சிகிட்டாரு. பின் என்னை அழைத்து மாஸ்க் போட சொன்னார். அஜித் என் போனை உடைக்கவில்லை என்று கூறியுள்ளார். உண்மையில் இந்த நபர் அஜித்தை காண வேலூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளாராம்.

Advertisement
Advertisement