பிரபல தொகுப்பாளினி டிடிக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம். குவியும் வாழ்த்துக்கள்.

0
121883
dd
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. இந்நிலையில் டிடிக்கு தற்போது “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் தந்து உள்ளார்கள். இதனால் திவ்யதர்ஷினி மிகுந்த சந்தோஷத்தில் பயங்கரமாக துள்ளிக் குதித்து கொண்டாடி வருகிறார். சென்னையில் நடைபெறும் பேஷன் ஷோக்களில் மிகவும் பிரபலமானது என்று சொன்னால் D AWARD மற்றும் DAZZLE STYLE ICON AWARD தான். மேலும், இந்த இரண்டும் இணைந்து பிரம்மாண்டமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தியது. இந்த ஃபேஷன் ஷோ பிரபலங்களை கௌரவப்படுத்தும் வகையில் ஏற்படுத்தியது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெய்ன், நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத், நடன பயிற்சியாளர் சாண்டி மாஸ்டர், வாணி போஜன்,கேத்ரின் தெரஸா,விஜே அஞ்சனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில் தற்போது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டி மற்றும் அவருடைய மனைவி கலந்து கொண்டார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் சாண்டி தன் மனைவியோடு நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மேலும்,இவர்களின் நடனம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது.

இதையும் பாருங்க : இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் வெற் றியாளர்களுக்கு கிடைக்காத பெருமை. முகெனுக்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் டிடிக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கிடைத்து உள்ளது. “படையப்பா வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் மாறல ” என்று நீலாம்பரி கூறுவது போல டிடி நாளுக்கு நாள் அழகாகவும், சூப்பரான உடையிலும் தோற்றமளிக்கிறார். இதனால் டிடிக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே தான் சொல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் டிடி மிக அழகான ஆடையில் பங்கேற்று உள்ளார். இதுகுறித்து திவ்யதர்ஷினியிடம் கேட்டபோது அவர் கூறியது, நம்மை யாராவது ஒருவர் டார்லிங் என்று செல்லமாக அழைத்தால் நம் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கின்ற மாதிரி இனிமையாக இருக்கும்.

அனைவருக்குமே ரொம்ப பிடித்த வார்த்தை டார்லிங். அதே போல் எனக்கு டார்லிங் ஆப் தி டெலிவிஷன் என்ற அவார்ட் கிடைத்தது எனக்கு ரொம்ப பெருமையாகவும், மன நிறைவாகவும்,மிகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. அதோடு ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான ஸ்டைல் இருக்கும். அதிலும் வயது அதிகமாகும்போது நமக்கு பொறுப்புகள் அதிகமாகின்றன. மேலும், நான் டிவியில் தொகுத்து வழங்கிய ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு விதமான ஆடைகளை அணிந்து வந்துள்ளேன். அதோடு என்னுடைய பேச்சுத் திறமைக்கு மட்டுமல்லாமல் நான் அணியும் ஆடைகளுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பார்கள் ரசிகர்கள். எனது ஆடைகளுக்கு டிசைன் செய்து கொடுக்கும் டிசைனர்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதில் நான் மிக உறுதியாக இருப்பேன்.

-விளம்பரம்-

நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நான் போடும் ஆடைகளின் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். மேலும்,நான் நிகழ்ச்சிகளில் அணியும் ஆடைகளின் மூலம் அந்த உடை டிசைனர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை கிடைக்கும் என்ற நோக்கில் தான் நான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த “எங்கிட்ட மோதாதே” சீசனில் முழுவதும் நான் புடவை அணிந்து தொகுத்து வழங்கினேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு உடை செய்த டிசைனர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இவர்களின் படைப்பு வெளிஉலகிற்கு தெரியும் என்ற நோக்கில் தான் நான் செய்தேன். இப்போது அவர்களின் தொழில் மிகவும் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது என்று கூறினார்.

Advertisement