இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் வெற் றியாளர்களுக்கு கிடைக்காத பெருமை. முகெனுக்கு கிடைத்துள்ளது.

0
68343
Mugen
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி உலக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுங்க. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் உலக மக்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.இந்தியாவிற்கு இதுவரை ஒருமுறை கூட முகென் வந்தது இல்லை. ஆனால்,முகென் அறிமுகமில்லாத போட்டியாளராக பங்கேற்று இன்று உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும்,அன்பையும் பெற்று உள்ளார். வழக்கம் போல் பிக் பாஸ் வீடுகளில் நடைபெறும் அத்தனை அக்கபோர்களுக்கும், காதல்களுக்கும் இந்த முறை பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். கடந்த சீசன்களை விட இந்த சீசன் வெறித்தனம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

-விளம்பரம்-
mugen

மேலும்,முகென் தன்னுடைய திறமையாலும்,வீடா முயற்சியாலும் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றார். இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் என பல திறமைகளை கொண்டுள்ளவர். மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள். மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் ராவ் பாடிய பாடல்கள் செம்ம ஹிட்டாகி உள்ளது. அது மட்டும் இல்லைங்க “நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார். இதனைத்தொடர்ந்து முகென் பாடிய இந்த பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டம் வென்ற பின் முகென் தன் நாடு திரும்பினார்.

இதையும் பாருங்க : கையில் இருந்த முன்னாள் காதலரின் டாட்டூ. திருமணத்திற்க்கு பின் மாற்றிக்கொண்ட மானசா.

- Advertisement -

மேலும், மலேசியா மக்களும், ரசிகர்களும் உற்சாகமாக முகென் ராவ்க்கு வரவேற்பு அளித்தார்கள். இந்நிலையில் மலேசிய மக்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் முகெனுக்கு மூச்சு திணற வைத்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சுற்றியது. மேலும், இந்த சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகென் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உற்சாகமாக கொண்டாடி வரவேற்கிறார்கள். மேலும், மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் முன்பாக முகென் நின்று தான் வாங்கிய ட்ராபியை ரசிகர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தார். மேலும், அப்போது முகென் எனக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் முகென் பாடிய பாடல்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பின்னர் தான் பெரிய அளவு பிரபலமானது.

மேலும்,பிக் பாஸ் வீட்டில் முகென்எழுதி பாடிய “நீதான் நீதான்” என்ற பாடலின் மூலம் பெருமளவில் பிரபலமானார். இந்நிலையில் தற்போது முகென் மலேசியா பிரதமரை நேரில் சந்தித்து உள்ளார். மேலும் ,அவருடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். மேலும்,அவர் இன்ஸ்டாலில் கூறியது, நான் பிரதமரை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என பதிவு செய்துள்ளார்.இதனால் ரசிகர்கள் முகெனுக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் வெற்றியாளரும் ஒரு நாட்டின் துணை பிரதமரை சந்தித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement