புகைபிடிப்பிங்களா? குழந்தை எப்போது? ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த டிடி. வீடியோ இதோ.

0
70173
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.

-விளம்பரம்-

டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அது மட்டும் இல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சிகளில் ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர வைத்துள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.

- Advertisement -

இதையும் பாருங்க : தீம் மியூசிக்குடன் வெளியானது ‘தலைவர் 168 ‘ பட தலைப்பு. பெயர் என்ன தெரியுமா ?

திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி டிடி அவர்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு அழகாக பதில் கூறியுள்ளார். அதில் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டுள்ளார்.

-விளம்பரம்-

உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா?

எனக்கு சுத்தமா புடிக்காது. நான் எங்க அப்பாவிடம் சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறேன். என்னை சுற்றி உள்ளவர்கள் என்ன வேண்டும் ஆனாலும் பண்ணலாம். ஆனால், நான் அந்த மாதிரி விஷயங்கள் செய்வது கிடையாது.

Image result for Vijay Tv Dd enkitta modathey

ரித்திக் ரோஷன் உடன் டேட்டிங் போனது உண்டா?

அவருக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே. எனக்கு தெரிஞ்சு ஹன்சிகா தான் அவங்களோட நல்ல நட்பில் இருக்கிறார்கள். ஹன்சிகா சிபாரிசு செய்தால் எனக்கு ஓகே.

அக்கா நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?

டிடி சிரித்துக் கொண்டே உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி. உங்களுடைய வாழ்க்கையிலும் அன்பு கிடைக்க நான் வாழ்த்துகிறேன்.

நீங்கள் எப்போ அம்மா ஆகப் போகிறீர்கள்?

குழந்தை பெற்றால் தான் அம்மா இல்லை. அன்னை தெரேசா எவ்வளவு பேருக்கு அம்மா.

உங்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா??

ஆமாம் எனக்கு விவாகரத்து ஆகி விட்டது. விவாகரத்து ஆகி நான்கு வருடங்களாகிறது.

Advertisement