சன் டிவிக்கு முன்பே ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சையை ஒளிபரப்பிய விஜய் டிவி. சன் டிவிக்கு செம ஆப்பு. இதோ ப்ரோமோ.

0
1460
master
- Advertisement -

விஜய் டிவயில் கடந்த இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வெற்றிபெற்றது. இதற்கு முன்னர் பல சமையல் நிகழ்ச்சிகள் வந்தாலும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி அளவிற்கு ரீச் ஆகவில்லை. இப்படி ஒரு நிலையில் சன் தொலைக்காட்சியில் ‘மாஸ்டர் செஃப்’ என்ற புதிய நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் தான் வெளியானது.

-விளம்பரம்-

மாஸ்டர் செஃப் ஒன்னும் புதிய கான்செப்ட் கிடையாது. 45 நாடுகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோதான் மாஸ்டர் செஃப். பிரிட்டனில் முதல்முறையாக மெகா ஹிட்டான இந்த நிகழ்ச்சி பல நாடுகளிலும் ஒளிபரப்பபட்டது. தற்போது அதே கான்சப்ட்டில் தான் இந்த நிகழ்ச்சியை தற்போது சன் டிவி இந்த நிகழ்ச்சியை துவங்கி இருக்கிறது.

இதையும் பாருங்க : அட்டை படத்திற்கு உள்ளாடை தெரியும்படி படு கிளாமர் போஸ் – ஜகமே தந்திரம் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் மீண்டும் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் ஒரிஜினல் வெர்ஷனை விஜய் டிவி தமிழில் மொழி பெயர்த்து ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்ப துவங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரித்த எண்டிமால் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. எண்டிமால் நிறுவனத்துடன் விஜய் டிவி ஒப்பந்தத்தில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை தற்போது தமிழில் ஒளிபரப்பி வருகிறனர். சன் டிவிக்கு முன்பே இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி குழுமம் ஒளிபரப்பி இருப்பது சன் டிவிக்கு பெரும் ஷாக்காகதான் இருக்கும்.

-விளம்பரம்-
Advertisement