சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : lockdown-ல் இந்த அஜித் படத்தையும், இந்த சிம்பு படத்தையும் பாக்காதீங்க- வெளிப்படையாக கூறிய கௌதம் மேனன். ஏன்னு பாருங்க.

Advertisement

அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நிஷா. அப்போது தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிஷா, அடிக்கடி புகைப்படங்களையும் வீடீயோக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தனது திருமண வீடீயோவை பகிர்ந்துள்ளார். அதில், வழி என்னுடைய திருமண வீடீயோவ பாத்தேன். இப்போ பார்த்தாலும் அழுகை தான் வருது. பொண்ண பொறந்தா இதை கடந்து தான் போகணும். என்று குறிப்பிட்டுள்ளார் நிஷா.

இதையும் பாருங்க : ‘அப்போ படிக்க போல’ ஆயுத எழுத்து சீரியல் நடிகை வகுப்பறையில் செய்த அலும்பலை பாருங்க.

Advertisement

கடந்த மகளிர் தினத்தன்று அறந்தாங்கி நிஷாவின் பெற்றோர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அறந்தாங்கி நிஷா குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் அவர்கள் கூறியது, என்னுடைய மகள் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த தருணத்தில் அனைவருக்கும் நான் நன்றி சொல்கிறேன் என்று கூறியிருந்தார். சொல்லிவிட்டார்கள். அப்போது நான் எவ்வளவோ அழுது புலம்பி இருக்கிறேன். ஆனால், ஒரு மனிதனுக்கு நிறம் முக்கியம் இல்லை மனமும், குணமும் தான் முக்கியம் என்பதை என் மகள் நிரூபித்து விட்டார்.

Advertisement

என் மகள் மீடியாவிற்கு நுழையும் போது பல பேர் என்னிடம் இதெல்லாம் தேவையில்லை பெண்பிள்ளை வேணாம் என்று சொன்னார்கள். ஆனால், என் மகள் மிகவும் தைரியமானவள். நான் அவளை பெண் பிள்ளையாக வளர்க்கவில்லை.ஆண் மாதிரி தான் தைரியமாக வளர்த்தேன். அவளே வெளியில் செல்லும் போது அம்மா நான் பெண்ணில்லை வீரப் பெண் என்று சொல்லுவாள். அந்த அளவிற்கு தைரியமும் துணிச்சலும் உடையவள் நிஷா என்று கூறிஇருந்தார்.

Advertisement