lockdown-ல் இந்த அஜித் படத்தையும், இந்த சிம்பு படத்தையும் பாக்காதீங்க- வெளிப்படையாக கூறிய கௌதம் மேனன். ஏன்னு பாருங்க.

0
12366
gmv
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் வாசுதேவ் மேனன். 2001-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘மின்னலே’. இது தான் கெளதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம்’, ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’, சரத்குமாரின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா’, வீராவின் ‘நடுநிசி நாய்கள்’, ஜீவாவின் ‘நீதானே என் பொன் வசந்தம்’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களை இயக்கினார் கெளதம் மேனன்.

-விளம்பரம்-
Thala 55: Ajith-Gautham Menon film not titled 'Sathya' | Tamil ...

தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இராமநாதபுரம் SP Dr. வருண் குமார் IPS கேட்டுக் கொண்டதற்கு இணங்க இயக்குநர் கெளதம் மேனன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘அப்போ படிக்க போல’ ஆயுத எழுத்து சீரியல் நடிகை வகுப்பறையில் செய்த அலும்பலை பாருங்க.

- Advertisement -

அந்த வீடியோவில் இயக்குநர் கெளதம் மேனன் “தற்போது 144 போடப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். அதை மீறி செய்தால் உங்கள் மீது FIR போடப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால், பாதுகாப்பாக அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். இந்த லாக் டவுன் டைமில் நல்ல திரைப்படங்களை கண்டு மகிழுங்கள். சிறந்த புத்தகங்களை வாசியுங்கள்.

Varun Kumar ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಏಪ್ರಿಲ್ 17, 2020

ஆனால், நான் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இப்போது பார்க்க வேண்டாம். ஏனெனில், ‘அச்சம் என்பது மடமையடா’-வில் வரும் சிம்பு கேரக்டர் அவரது காதலியை கூட்டிக் கொண்டு ரோட் ட்ரிப் செல்வார். அதேபோல், ‘என்னை அறிந்தால்’ படத்தில் வரும் அஜித் கேரக்டர், அவரது மகளை கூட்டிக் கொண்டு வெளியூர்களுக்கு செல்வார். இது இரண்டுமே இப்போது நடைமுறையில் நடக்காது. ஆகையால், இவ்விரு படங்களையும் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள்.

-விளம்பரம்-
Does Gautham Menon and Simbu's biggest experiment work? | Fully Filmy

நான் இயக்கிய மற்றொரு படமான ‘வாரணம் ஆயிரம்’-ஐ பாருங்கள். அதில் சூர்யா கேரக்டர் தனது காதலி இறந்ததும், அதிலிருந்து வெளியே வர வொர்க்கவுட் செய்வார். அது உங்களுக்கு ஒரு இன்ஸ்பயரிங்காக இருக்கும்” என்று அந்த வீடியோ பதிவில் கெளதம் மேனன் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement