‘அப்போ படிக்க போல’ ஆயுத எழுத்து சீரியல் நடிகை வகுப்பறையில் செய்த அலும்பலை பாருங்க.

0
12556
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பிரபலமான சீரியல்களில் ட்ரெண்டிங் சீரியலாக விளங்கி வருவது ஆயுத எழுத்து. இந்த சீரியலில் கலெக்டர் இந்திரா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீத்து கிருஷ்ணன். இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதற்குப் பிறகு இவர் ஜீ தமிழ், விஜய் டிவி என மாறி மாறி சீரியல்களில் நடித்து வந்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் கிராமத்து பின்னணியில் உருவாகி வந்த கதை. இந்த சீரியலில் ஸ்ரீத்து அவர்கள் பெண் தாதாவின் மகனுடன் காதல் வயப்பட்தும், நேர்மையான சப் கலெக்டராகவும் வரும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் பல ரசிகர்களை ஸ்ரீத்து கவர்ந்தார். திடீரென்று ஸ்ரீத்து இந்த சீரியலை விட்டு விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பார்க்கையில் ஸ்ரீத்து வைத்து சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களை வந்து இருந்தது. அதாவது விஜய் டிவியில் படிச்சு,விஜய் டிவிக்கே கலெக்டர் ஆயிட்டாங்க நம்ம ஸ்ரீத்து என்று பல மீமிஸ்கள் இணையங்களில் வந்தது. இதனால் தான் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று கூறப்பட்டது.

தற்போது ஆயுத எழுத்து சீரியலில் இவருக்கு பதிலாக நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா தான் நடித்து வருகிறார். இருப்பினும் ஸ்ரீத்து தான் இந்திரா கலெக்டர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார் என்று பலர் புலம்பி வருகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீத்து நடித்த முதல் சீரியல் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு(7c) என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரீத்து.

-விளம்பரம்-

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரீத்து, சமீபத்தில் தனது கல்லூரியில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், என்னுடைய கல்லூரி நாட்களில் நான் மிகவும் மிஸ் செய்கிறேன் காலை முதல் மதியம் 1.30 மணி வரை கல்லூரியில் இருப்பேன். அதன் பின்னர் ஷூட்டிங், பின்னர் ஜோடி நிகழ்ச்சிக்காக ரிகர்சல் என்று என்னுடைய நாளில் 18 மணி நேரம் ஓடி விடும். இருப்பினும் என்னை நினைத்து பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர் ஒருவர் அப்போது கல்லூரிக்கு படிக்க போல என்று கேட்டதற்கு ,தான் ஆல் க்ளியர் என்று பதிலளித்துள்ளார் ஸ்ரீத்து. மற்றொரு ரசிகர் ஒருவர் உங்கள் டிகிரியை முடிச்சிடீங்களா ? என்று கேட்டதற்கு தற்போது நான் pg படித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement