கோமாளிகளும் காதலும் – புகழை போல பாலாவிற்கும் இருக்கும் ஒரு காதல் கதை. ஆனால் இப்படி ஒரு சோகமா ?

0
532
bala
- Advertisement -

சினிமாவில் எதையாவது சாதித்து விடலாம் என சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்று கொண்டு தான் இருக்கின்றனர். அதில் சாதித்தவர்கள் என்னவோ குறைவு. முயற்சி செய்யாததால் எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது. நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும். அந்தவகையில் வாழ்க்கையைத் தேடி சென்னைக்கு வந்த இளைஞர் தான் பாலா. ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா? என்ற ஏக்கத்திலும் விடாமுயற்சியிலும் போராடியவர். பின் விஜய் டிவியில் இவருக்கான கதவு திறந்தது. பொதுவாகவே விஜய் டிவி பல கலைஞர்களை மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர் தொடங்கி தற்போதிருக்கும் குக் வித் கோமாளி புகழ் வரை பல கலைஞர்களை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி மக்கள் மத்தியில் பிரபலமான காமெடியனாக பாலாவை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியவர் பாலா. அதன் பின் தன்னுடைய விடா முயற்சியினாலும் கடும் உழைப்பினாலும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

- Advertisement -

பாலா பற்றிய தகவல்:

பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை சிரிக்க வைத்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலாவின் காமெடியை யாராலும் மறக்க முடியாது. சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியை பாலாவிற்காக பார்க்கும் கூட்டமும் இருக்கிறது. அந்த அளவிற்கு முழு நேராக என்டர்ட்ரைனராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் பாலா. அதுமட்டும் இல்லாமல் பாலா அவர்கள் மீடியாவில் மட்டுமில்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

நீயா நானா நிகழ்ச்சியில் பாலா :

சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் அவார்டில் பாலாவிற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலருக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருவது தெரிந்தது. இதற்கு பலரும் மனதார பாலாவிற்கு வாழ்த்தி தெரிவித்து இருந்தார்கள். இப்படி பலரையும் சிரிக்க வைத்த பாலாவின் வாழ்க்கையிலும் சோகம் இருக்கிறது. பாலா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கும் நான் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய காதல் அனுபவத்தை பற்றி கூறியிருப்பது,

-விளம்பரம்-

பாலாவில் வாழ்வில் நடந்தது:

2019ஆம் ஆண்டு நான் ஒரு பெண்ணை பார்த்தேன். பார்த்த உடனே எனக்குள் ஒரு ஸ்பார்க். உண்மையாலுமே அந்த காதல் எனக்குள் வந்தது. பின் அந்த பெண்ணும் என்னிடம் நன்றாக பேசினாள், நானும் அவரிடம் நன்றாக பேசினேன். இருவருமே நன்றாக பழகினோம். ஒருநாள் நான் என்னுடைய காதலை அந்த பெண்ணிடம் சொன்னேன். அவர் கீழே குனிந்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டார். நானும், அய்யோ என்ன ஆகிவிட்டது? என்று பதட்டத்தில் கேட்டால் நான் உங்களை அண்ணாவாக தான் பார்த்தேன் என்று சொல்லிவிட்டார். அப்படியே மனம் சுக்குநூறாக உடைந்தது.

பாலா காதல் தோல்வி:

இருந்தாலும் வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் வந்து விட்டேன். இது மாதிரி நான் நான்கு காதல் தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். அதற்கு பிறகு இந்த காதலே வேண்டாம் என்று விட்டு என்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று இந்த சோகத்தையும் ஜாலியாக பாலா சொல்லி இருந்தார். ஆனால், இது கேட்போருக்கு மனதை கலங்க வைத்திருக்கிறது. இப்படி பாலா பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement