காற்றின் மொழி சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள விஜய் டிவி சீரியல் நடிகர். யார் தெரியுமா ?

0
3573
kaatrin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது அதிலும் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடரில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும் இந்தத் தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமாகியிருக்கிறார் பிரியங்கா ஜெயின்.இந்த தொடரில் அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா.

- Advertisement -

கடந்த ஆண்டு அக்டொபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சமீபத்தில் சிவா மனசுல சக்தி சீரியலின் நாயகன் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது ‘சிவா மனசுல சக்தி ‘ சீரியல். இந்த சீரியலில் நாயகனாக விக்ரம் ஸ்ரீ என்பவரும் நாயகியாக தனுஜா கௌடா என்பவரும் நடித்து வந்தனர்.

Siva Manasula Sakthi - Disney+ Hotstar

ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்ற இந்த சீரியல் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தோடு நிறைவடைந்தது. இந்த சீரியல் 355 எபிசோடுகளுக்கு மேல் ஓடியது. இந்த சீரியலுக்கு பின்னர் இந்த சீரியலில் நடித்த விக்ரம் ஸ்ரீயை வேறு எந்த சீரியலிலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் காற்றின் மொழி சீரியலில் ரீ – என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் இந்த சீரியலில் தொடர்வாரா இல்லை கெஸ்ட் ரோல் தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement