ஷிவானி தனது நாய்க்கு கேக் வெட்னதுக்கே இப்படி சொல்றீங்களே ? இந்த விஜய் டிவி பிரபலம் செல்லப்பிராணிக்கு A/c போட்டிருக்காங்க.

0
2633
shivani
- Advertisement -

பொதுவாக வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்னவோ சாதாரண ஒரு விஷயம் தான். அதிலும் ஒரு சிலர் செல்லப் பிராணிகளை தனது வீட்டின் ஒரு குடும்ப நபர் போல தான் கவனித்து வருவார்கள். அதே போல தான் பல்வேறு நடிகர் நடிகைகள் தங்களது செல்லப் பிராணிகள் மீது பாசம் காண்பித்து வருகின்றனர். இதில் ஒரு சிலரின் பாசம் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிடுவதும் உண்டு. அந்த வகையில் சீரியல் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ஷிவானி தனது செல்லப் பிராணியின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

-விளம்பரம்-
May be an image of 3 people

நாய்க்குட்டிக்கு ஷிவானி கேக் வெட்டியதெல்லாம் பெரிய விஷயமில்லை. அதைவிட ஆச்சரியம் பிக்பாஸ் செல்வதற்காக க்வாரன்டைனில் இருந்தபோது அந்த நாய்க்குட்டியையும் தான் தங்கிய நட்சத்திர ஓட்டலிலேயே உடன் தங்கவைத்துக் கொண்டார் ஷிவானி. சேனல் இதற்காக இவருக்கு சிறப்பு அனுமதி வழங்கியது. தன் செல்ல நாய்க்குட்டி டைமண்டின் முதல் பிறந்த நாளை பாலா, சம்யுக்தா, ஆஜீத் உள்ளிட்ட சக நண்பர்களையெல்லாம் அழைத்து, கேக் வெட்டி கொண்டாடினார்.

- Advertisement -

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, நாய்க்கெல்லாம் இது கொஞ்சம் ஓவர் என்று பலர் விமர்சித்து இருந்தனர். ஆனால், ஷிவானியை போலவே விஜய் டிவி நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் சரண்யாவும் செல்லப்பிராணி பிரியர் தான். இவர் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்குட்டியின் பெயர் ‘பனானா'(Banana). சில ஆண்டுகளுக்கு முன் திடீரென வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது பனானா.

அதனைத் தேடி முகநூலில் போஸ்ட்டரே போட்டு விட்டார். மூன்று நாட்கள் கழித்து எப்படியோ பனானா வீட்டுக்குத் திரும்பி விட்டது. அந்த மூன்று நாளும் சரண்யா சரியாகச் சாப்பிடாமல் உண்ணாவிரதம் எல்லாம் இருந்தாராம். அதே போல விஜய் டிவி சீரியல் நடிகையான ரச்சிதா, தனது கணவர் வாங்கி கொடுத்த நாய் குட்டி ‘ஹேப்பி’ மீது கொள்ளை பாசமாம். ஹேப்பி பெங்களூருவில் ரச்சிதாவின் அம்மா வீட்டில் இப்போது வளர்ந்து வருகிறது . தொடர்ந்து அம்மாவுக்கு போன் போடும்போதெல்லாம் வீடியோ காலில் ஹேப்பியை சந்திப்பது ரச்சிதாவின் வழக்கமாம். அப்படி வீடியோ காலில் பேசினாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூருவுக்கு ஹேப்பியைப் பார்க்க ட்ரிப் அடித்து விடுவாராம்.

-விளம்பரம்-
iswarya

இவர்களின் pet லவ்வை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு சன் டிவியில் தொகுப்பாளராக இருந்த ஐஸ்வர்யா தனது செல்லப் பிராணி மீது அவ்வளவு அக்கறை கொண்டவர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பன ஜோடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சென்னையிலிருந்த போது வீட்டில் ஒரு பூனைக்குட்டி வளர்த்து வந்தார். கோடைகாலம் வந்தால் வெயிலைத் தாங்காது என வீட்டில் அந்தப் பூனைக்குத் தனி ஏஸி அறை ஒதுக்கி விடுவாராம்.

Advertisement