மௌன ராகம் 2 துவங்கும் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு – அதிகாரபூர்வ வீடியோ இதோ.

0
1825
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த தொடரில் சஞ்சீவ்விற்கு பதிலாக திருமணம் சீரியல் சித்து நடித்துள்ளார். ராஜா ராணி 2 வை தொடர்ந்து தற்போது அடுத்த சீரியலின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் தான் மௌன ராகம். இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்டது. இந்த சீரியல் வங்காளி மொழி தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதையும் பாருங்க : பிக் பாஸுக்கு பின் ஷிவானி நடத்திய முதல் போட்டோ ஷூட் – இனி 4 மணி கிடையாது டைம மாத்திட்டாங்க.

- Advertisement -

இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்து உள்ளார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் பேபி கிருத்திகா.இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுஇருந்தது . இதுவரை 863 எபிசோடுகளை கடந்து இருந்த நிலையில் இந்த சீரியல் கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனால் இந்த சிரியலின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகிஇருந்தது. மௌன ராகம் இரண்டாம் பாகத்தில் கிருத்திகாவிற்கு பதிலாக பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் ரவீனா நடிக்க இருக்கிறார். இந்த சீரியம் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement