பிக் பாஸுக்கு பின் ஷிவானி நடத்திய முதல் போட்டோ ஷூட் – இனி 4 மணி கிடையாது டைம மாத்திட்டாங்க.

0
5451
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது.

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி, தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஷிவானி.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஷிவானி. அதன் ஒரு சில புகைப்படங்களை நேற்று 6 மணி அளவில் போட்ட ஷிவானி இன்றும் 6 மணி அளவில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை ஷிவானி பதிவிட துவங்கி விட்டார் என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர் .

-விளம்பரம்-
Advertisement