அட, அன்புடன் குஷி சீரியலில் நடித்து வரும் இவர் தான், மைனா நந்தினி சகோதரராமே.

0
2160
myna
- Advertisement -

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.மைனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதை நடிகை மைனா, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

திருமணம் ஆன சில மாதங்களிலேயே கர்ப்பமாக இருந்த மைனா முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்கத் துவங்கினார். மைனா நந்தினி பற்றி இத்தனை விஷயம் அறிந்தாலும், அவருக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்புடன் குஷி’ சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்தம்பி பிரஜன் நடித்து வரும் இந்த சீரியல் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

- Advertisement -

சின்னத்தம்பி சீரியலுக்கு பிறகு நடிகர் ப்ரஜின் ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். அடுத்ததாக இவர் நடித்து வரும் “அன்புடன் குஷி” சீரியல் காதல் கதை அம்சங்களை கொண்டதாக அமைக்கப்பட்டது. இந்த சீரியலில் முதலில் பிரஜனுக்கு ஜோடியாக மான்ஷி ஜோஷி என்பவர் நடித்த வந்தார். ஆனால், சீரியல் ஒளிபரப்பான சில எபிசோடுகளிலேயே இவருக்கு பதிலாக வேறு ஒருவர் கமிட் ஆனார்.

பிரஜனை தவிற இந்த சீரியலில் ரசிகர்களுக்கும் பரிட்சியமில்லாத பலர் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் பிரஜின் நண்பராக நடித்து வருபவர் தான் மைனா நந்தினியின் சொந்த தம்பியாம். சமீபத்தில் தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement