அன்று மணிரத்னம் படத்தின் நாயகி தான் இன்று மாயனின் அம்மா நாச்சியார்

0
3463
naam
- Advertisement -

பெரும்பாலும் வெள்ளித்திரையில் ஹீரோயின்களாக நடித்த பலபேர் தற்போது சின்னத்திரையில் அம்மா,மாமியார், அக்கா அண்ணி என்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அதிலும் புதியதாக வரும் சீரியல்களில் மூத்த நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்த சீரியலில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் 2. இந்த சீரியலில் நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிகை சபிதா ஆனந்த் நடிக்கிறார். இவர் பெரும்பாலும் பல சீரியல்களில் அம்மா, மாமியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

‘மாட்டொரு சீதா’ என்ற மலையாள படம் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அப்போது அவருக்கு 5 வயது தான். பின் இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். மேலும், தன்னுடைய பதினாறு வயதில் பல மலையாள படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அப்போது மணிரத்தினம் இயக்கத்தில் உணரு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இவர் சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இதுவரை இவர் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான கடல்புறத்தில் என்ற சீரியல் மூலம் தான் இவர் சின்ன திரையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் காவியாஞ்சலி, சொர்க்கம், கோலங்கள் போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டு இயல்பாக நடிக்கும் திறன் பெற்றவர்.

தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் நடிகை பபிதா நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

-விளம்பரம்-
Advertisement