கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.
சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. பின்னர் படப்பிடிப்புகளுக்கு கொஞ்சம் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு படப்பிடிப்புகள் முடங்கி இருக்கிறது. அதே போல ஒரு சில படப்பிடிப்புகளை சென்னையிலேயே நடந்த திட்டமிட்டு இருந்தனர்
இருப்பினும் சீரியல் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும் பல சீரியல்கள் இந்த லாக் டவுன் சமயத்தில் நிறுத்தப்பட்டது. அதே போல தான் விஜய் டிவியின் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது. இந்த லாக் டவுன் சமயத்தில் விஜய் டிவியில் பல்வேறு சீரியல்களை இணைந்து சங்கமம் என்ற பெயரில் உருட்டி வந்தனர். சீரியல் எபிசோடுகளை ஈடு செய்ய அணைத்து சீரியல்களுக்கும் டைட்டில் பாடல்கள் எல்லாம் ஒளிபரப்பப்பட்டு ரன்னிங் டைமை முட்டு கொடுத்து வந்தனர்.
ஆனால், எடுத்து வைத்த எபிசோடுகள் எல்லாம் தீர்ந்து போனதால் சன் டிவியை போல விஜய் டிவியும் பழைய சீரியல்களை தூசி தட்ட துவங்கிவிட்டது. இதனால் இந்த இந்த சீரியலை போடுங்க அந்த சீரியலை போடுங்க என்று ரசிகர்கள் விஜய் டிவிக்கு வேண்டுகோள் வைத்தனர். அதில் பலர் மகாபாரதம் தொடரை ஒளிபரப்ப சொன்னார்கள். இப்படி ஒரு நிலையில் வரும் திங்கள் முதல் காலை 10 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை மகாபாரத தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.