ஒரு பக்கம் அரசு சம்பளம், மறுபக்கம் விஜய் டிவி சம்பளம் – பிரம்மாண்ட வீட்டை கட்டிய ராமர். கிரகபிரவேசத்துக்கு குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்.

0
1446
- Advertisement -

சொந்தமாக வீடு கட்டி விஜய் டிவி ராமர் கிரகப்பிரவேசம் நடத்தி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல காமெடியன்கள் பிரபலமடைந்து இருக்கின்றனர். சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை போன்ற பலர் விஜய் டிவியில் இருந்து வந்து தற்போது சினிமாவில் ஹீரோவாக ஜொலித்து இருக்கிறார்கள். அதே போல பல காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சினிமாவிலும் காமெடியான நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் டிவியின் ஆஸ்தான காமெடியனான ராமரும் ஒருவர் தான். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற ஒரே வசனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் ராமர். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் காமெடி போன்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் இவர் கலக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பெண் வேடம் அணிந்து வந்தால் தான் ரசிகர்கள் இவரை பெரிதும் விரும்புவர்.

- Advertisement -

ராமர் குறித்த தகவல்:

தற்போது ராமர் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு எல்லா நிகழ்ச்சியிலும் ராமர் பங்கேற்று வருகிறார். சின்னத்திரையின் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், ராமரை பற்றி பல விஷயங்களை அறிந்தாலும் அவர் ஒரு அரசு அதிகாரி என்பது பலரும் அறியாத ஒன்று. அதாவது, சமீபத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

ராமர் அரசு அதிகாரி:

அதில் அவர், கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக 18 (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ராமரை இத்தனை நாள் வரை தொலைக்காட்சி நடிகர் மட்டுமே நினைத்து வந்த ரசிகர்களுக்கு அவர் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

-விளம்பரம்-

ராமர் வீட்டு கிரகபிரவேசம்:

இந்த நிலையில் நடிகர் ராமர் அவர்கள் சொந்தமாக வீடு கட்டி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் அரசு அதிகாரியாக பணியாற்றியும், விஜய் டிவியில் நடித்தும் சம்பாதித்த பணத்தின் மூலம் சொந்தமாக வீடு கட்டி கிரக பிரவேசம் நடத்திருக்கிறார். இந்த விழாவில் நடிகர் ரோபோ சங்கர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். தற்போது ராமர் வீட்டு கிரகப்பிரவேச புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த பலரும் ராமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement