விஜய் டிவி ராமர் ஹீரோவாக நடித்துள்ள ‘கொளத்தூரான்’ FDFS – படம் எப்படி இருக்கு?

0
660
ramar
- Advertisement -

விஜய் டிவி ராமர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல காமெடியன்கள் பிரபலமடைந்து இருக்கின்றனர். சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை போன்ற பலர் விஜய் டிவியில் இருந்து வந்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வருவது போல பல காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சினிமாவிலும் காமெடியான நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் டிவியின் ஆஸ்தான காமெடியனாக திகழ்பவர் ராமர்.என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற ஒரே வசனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானது இரன்டு பேர் தான். ஒன்று லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றொன்று என்னமா ராமர். இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் காமெடி போன்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வருகிறார்.

- Advertisement -

விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள்:

அதிலும் அது இது எது நிகழ்ச்சியில் வரும் சிரிச்ச போச்சு என்ற பகுதியில் இவர் அடித்த லூட்டிகள் ஏறலாம்.
அது மட்டும் இல்லாமல் இவர் பெண் வேடம் அணிந்து வந்தால் தான் ரசிகர்கள் இவரை பெரிதும் விரும்புவர். ஆனால், தான் பெண் வேடம் அணிவதை தனது மனைவியும்,குழந்தைகளும் விரும்பைவில்லை என்று ராமர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனால் தான் என்னவோ சமீப காலமாக இவர் பெரியதாக பெண் வேடம் அணிவது இல்லை.

ராமர் குறித்த தகவல்:

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு இவர் தன் மனைவி, குழந்தைகள் உடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். சொல்லப்போனால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்று தான் சொல்லணும். அந்த அளவிற்கு இவர் விஜய் டிவியில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

ராமர் நடித்த படம்:

மேலும், இவர் பெயரை வைத்து விஜய் டிவியில் ஒரு காமெடி நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி இருந்தது. அதுவும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் ராமர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, ராமர் நடித்திருக்கும் படம் கொளத்தூரான்.

படம் குறித்த விமர்சனம்:

இந்த படம் வெளியானதை அடுத்து படம் பார்த்தவர்கள் கூறி இருப்பது, படம் நன்றாக இருக்கிறது. நகைச்சுவையாக பார்த்த ராமரை தற்போது வித்தியாசமான தோற்றத்தில் பார்க்க முடிகிறது. கதை நன்றாக இருக்கிறது. பெரிய ஆர்டிஸ்ட் பண்ணியிருந்தால் இன்னும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கும். இது ராமரின் வித்தியாசமான முயற்சி என்று படம் பார்த்த பலரும் கமெண்ட்ஸ் கூறியிருந்தார்கள்.

Advertisement