முதல் முறையாக சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி. புகழின் குறிப்பிட்ட பகுதியை நீக்கிய விஜய் டிவி. இதோ அந்த வீடியோ.

0
4524
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்தது இல்லை. சூப்பர் சிங்கர் துவங்கி பிக் பாஸ் வரை பல நிகழ்ச்சிகள் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உருவக் கேலி அதிகம் இடம்பெறுகிறது என்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சர்ச்சை எழுந்த்து. அதே போல ஜெகன் நடத்திய கனக்ஷன் நிகழ்ச்சியில் கூட டபுள் மீனிங் வார்த்தைகள், பாடி ஷேமிங் போன்றவை இருந்ததாக சர்ச்சைகள் எழுந்த்து. இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

-விளம்பரம்-

ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட குக்கு வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு மக்களிடத்தில் பெரும் ஆதரவு கிடைத்தது. இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் தான் எந்த வித சர்ச்சைகளில் சிக்காமல் ஒழுங்காக சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியும் இப்போது புதிய ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது நேற்றய நிகழ்ச்சியில் கோமாளிகள் கன்புயூஷன் அறைக்கு அனுப்ப்பட்டனர்.

- Advertisement -

இதில் ஒவ்வொரு கோமாளிகளும் உள்ளே சென்று அங்கே கூறப்படும் சமையல் குறிப்புகளை எழுதி வந்து தனது சமையல் பார்ட்னர்களுக்கு தெரிவித்தனர். அப்படி புகழ் உள்ளே சென்ற போது கன்புயூஷன் ரூமில் பேசிய அந்த நபர், புகழ் முகத்தை சிரிச்ச மாதிரி வையுங்க சிரித்தால் நீங்கள் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறீர்கள் ஆம்பளைங்களுக்கு உங்களை லவ் பண்ணனும் தோன்றும் என்று அவர் கூற BMG -ல் வடிவேலு வாய்ஸ் ஓவரில் ‘அவனா நீ’ என்ற வசனம் ஒலித்தது.

இந்த வீடியோவால் கடுப்பான குக்கு வித் கோமாளி ரசிகர்கள், குக்வித் கோமாளில Sexist, body shaming, woman shaming காம்டிகளை தொடர்ந்து Homophobic slur அவனா நீ காமெடி மட்டும்தான் பண்ணாம இருந்தானுக அதுவும் பண்ணிட்டானுக. வாழ்த்துகள் சார் என்று தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த பகுதி டிவியில் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும் ஹாட் ஸ்டாரில் அப்படியே தான் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement