ஹீரோவாக ரியோ கமிட் ஆகியுள்ள அடுத்த படம்.. ரியோவிற்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி பட நடிகை..

0
2872
rio-raj

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பல்வேறு கலைஞர்கள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் தொடங்கி தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின், ரக்சன் வரை தமிழ் சினிமாவில் கால்பதித்து விட்டனர். அந்த வகையில் தற்போது சினிமாவின் நியூ என்ட்ரியாக வருகை தந்திருப்பவர் பிரபல தொகுப்பாளர் ரியோ ராஜ்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரியோ. கனா காணும் காலங்கள் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடவே ரியோ ராஜ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒருமுகமாக மாறிவிட்டார். அதன் பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார் ரியோ. ரியோ, சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான சரவணன் மீனாட்சியின் மூன்றாவது சீஸனில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சிம்ரன் ரோலில் நடிக்க வேண்டியது இவர் தானாம்.. ரகசியம் சொன்ன சரண்..

- Advertisement -

எதிர்பார்த்தது போல அந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது இதை தொடர்ந்து சினிமாவில்இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது சினிமாவில் வெற்றிகரமான நடிகராக நடித்து வரும் சிவகார்த்திகேயன் நடிகர் ரியோவை வைத்து தனது சொந்த தயாரிப்பில் படம் எடுக்க போவதாக அறிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார் நடிகர் ரியோ. அந்த திரைப்படம் ஓரளவிற்கு வெற்றியை அடைந்திருந்தது. இந்த நிலையில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

Image

பெயரிடப்படாத இந்த புதிய படத்தினை பத்ரி வெங்கடேஷ் என்பவர் இயக்கவிருக்கிறார் இவர் ஏற்கனவே அதர்வா நடித்த பானா காத்தாடி, செம போதை ஆகாதே போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் ரியோவிற்கு ஜோடியாக விஜய்சேதுபதியுடன் பீசா சேதுபதி போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இவர்களை தவிர எம்எஸ் பாஸ்கர், ரோபோ ஷங்கர், முனிஸ்காந்த், ஆடுகளம் நரேன் போன்ற பலரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை கொடைக்கானல்சிக்கிம் குஜராத் போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை போலவே இந்த படமும் ரியோவிற்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தைப் பற்றிய மேலும் சில விபரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் முதிர்க்கப்பட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement