தற்போது விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி எண்ணற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதிலும் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜீ குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை போல ஜீ தமிழ் பிரபலங்களை ஒரே வீட்டில் மூன்று நாட்கள் தங்க வைத்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அவ்வளவு ஏன் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும் என்று கூட சில பேச்சுக்கள் அடிபட்டது. இப்படி ஒரு நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜய் டிவி பிரபலமும் காமெடி நடிகருமான ரோபோ சங்கர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று உள்ளனர். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.சின்னத்திரையில் தொடங்கிய இவரது பயணம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர்.அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது கலக்கப்போவதுயாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ என்ற நவராத்திரி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கர் கலந்துகொள்ள இருக்கிறாராம். இந்த நிகழ்ச்சியில் அக்டோபர் 24 சனிக்கிழமை முதல் தொடங்கி அக்டோபர் 28 புதன்கிழமை வரை நடைபெறுகின்ற இந்தவார எபிசோடுகளில் மகிழ்வூட்டும் துடிப்பான கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சியும் இதில் உள்ளடங்கும்.