8 மாதத்தில் உடலை பிட்டாக மாற்றியுள்ள சீரியல் நடிகர் அமீத் – என்ன ஒரு Transformation

0
5461
- Advertisement -

விஜய் தொலைக்காட்சி பிரபலங்களான அமீத் மற்றும் ஸ்ரீரஞ்சனி நடிக்கும் புதிய தொடர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி. சூரியன் எஃப்.எம்-ல் ஒரு வருடம் ஆர்.ஜேவாக வேலைபார்த்த பிறகு, புதுயுகம் ‘கேலி பாதி கிண்டல் பாதி’ நிகழ்ச்சியிலும் பிரபலமானவர் ஶ்ரீரஞ்சனி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்குபெற்று வந்தார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்த அமித் பார்கவும் ஆங்கர் ஸ்ரீரஞ்சனியும் காதலித்தார்கள் என்றாலும், பெற்றோரின சம்மதத்துடனேயே இவர்களது திருமணம்  2016-ம் ஆண்டு ஆண்டு நடைபெற்றது. அமீத் தொலைக்காட்சி நடிகராக மட்டுமல்லாமல் சினிமாவிலும் பல படங்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

அமித் பார்கவ் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் கண்ணாடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல சன் தொலைக்காட்சியில் கண்மணி சீரியலிலும் நடித்து வருகிறார்.இறுதியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் விஜய் டிவி சீரியலில் நடிக்கவில்லை.

இப்படி ஒரு நிலையில்  ஜீ தமிழில் சமீபத்தில் துவங்கப்பட்ட திருமதி ஹிட்லர் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் அமீத் பார்கவ் தனது உடல் எடையை குறைத்து படு பிட்டாக மாறியுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement